உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா பெண் டாக்டர் கொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி; ஜன.,20ல் தண்டனை அறிவிப்பு

கோல்கட்டா பெண் டாக்டர் கொலை வழக்கு: சஞ்சய் ராய் குற்றவாளி; ஜன.,20ல் தண்டனை அறிவிப்பு

புதுடில்லி: கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை 20ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் பயிற்சி டாக்டர் கடந்தாண்டு ஆகஸ்ட் 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w4wlyzje&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பெண் டாக்டர் உடல் கண்டெடுக்கப்பட்ட மருத்துவமனையிலும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தினமும் என 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இன்று (ஜனவரி 18) நீதிபதி தீர்ப்பு அளித்தார். சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவித்துள்ள அவர், தண்டனை வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, 'பெண் பயிற்சி டாக்டர் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டேன். இதில் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி சம்பந்தப்பட்டுள்ளார்' என சஞ்சய் ராய் தனது தரப்பு கருத்தை முன் வைத்தார். இதற்கு, 'உங்களுக்கு பேச ஜனவரி 20ம் தேதி வாய்ப்பு தரப்படும் என்றார் நீதிபதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 18, 2025 23:02

அட போங்க நீங்க ஒண்ணு. எங்களுக்கு இதுலெல்லாம் நம்பிக்கை போயிடுச்சு அவ்வளவுதான் சொல்ல முடியும். அதிக பட்சமா நீங்க தூக்கு தண்டனை கொடுக்கறதா வச்சுக்குவோம், அந்த குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டுல அப்பீல் பண்ணுவாரு. அங்க அவரு குற்றவாளி இல்லைன்னு விடுதலை ஆனாலும் ஆச்சரியப்பட முடியாது. ஒருவேளை அங்கேயும் குற்றவாளின்னு நிரூபிச்சா, ஆயுள் தண்டனையா மாத்திடுவாங்க. அவரும் கொஞ்ச நாளைக்கு ஜெயில்ல ஆடு கோழி எல்லாம் சாப்பிட்டுட்டு வெளியில வந்துடுவாரு. அவரையும் கட்டித்தழுவி வரவேற்பாங்க.


Ramesh Sargam
ஜன 18, 2025 20:13

20ம் தேதி அறிவிக்கப்பட உள்ள தீர்ப்பு கடைசி தீர்ப்பாக இருக்குமா? அல்லது குற்றவாளி மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுமா?


AMLA ASOKAN
ஜன 18, 2025 18:34

நீதிமன்றத்தால் 162 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு ஒரு காம வெறியன் தன்னிச்சையாக செய்த கற்பழிப்பு என்று உறுதியாகி விட்டது . ஆனால் இது ஒரு மாபெரும் சதி , கூட்டு பாலியல் , தொடர் சம்பவம் என்று சித்தரிக்கப்பட்டு நடந்த போராட்டத்தால் , மேற்கு வங்கத்தின் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். மருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்டு பல நோயாளிகள் மரணமடைந்தனர் . இன்று , ஒரு தனி நபர் செய்யும் குற்றத்தை பல பேர் பின்னணி கொண்டது என்று வர்ணிப்பது , விமர்சிப்பது வாடிக்கையாகி விட்டது . எல்லாம் கேவலமான , கோமாளித்தனமான அரசியல் நிகழ்வுகள் .


RAMAKRISHNAN NATESAN
ஜன 18, 2025 20:14

கூட்டு பாலியல் வன்கொடுமை என்று மருத்துவர்களே சொல்கிறார்கள் ..... அதனால்தான் உச்சமன்றம் தலையிட்ட பிறகும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்தது .... தடயங்கள் அழிக்கப்படுவதற்காகவே விசாரணைக்கு முன்பு உங்கள் ஹிம்சை மன்னரின் சகோதரி கட்சியைச் சார்ந்த நபர்கள் குற்றம் நடந்த இடத்திலேயே வன்முறை வெறியாட்டம் ஆடினர் ..... தவறிழைக்காத, ப்ரோடோகால் படி செயல்பட்ட கவர்னரை எதிர்த்து மாநிலம் முழுவதும் உமது கட்சியினர் போராடினால் அது சரியா ?? தம்மைப்போன்ற மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டால் மருத்துவர்கள் போராடக்கூடாதா ?? எந்த ஊர் நியாயம் இது ?? எதையாவது உளறி அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டாம் ...


indian
ஜன 18, 2025 17:48

அவனை தீ மு க வில் சேர்த்து விடுங்கள்........


GMM
ஜன 18, 2025 17:45

வழக்கின் இயக்குனர் மம்தா. மேற்பார்வை நீதிமன்றம். கற்பனை கதை இலாகா மாநில போலீஸ் மற்றும் சிபிஐ. அரசியல், அதிகார பெரியவர்கள் தலையீடு இருந்தால், மாநில அளவில் உண்மை மறைக்கப்படும். நூறுக்கு மேற்பட்ட சாட்சிகள் எதற்கு? வழக்கை ஜோடிக்கவா ? சாட்சி கையெழுத்து இருவர் தான் போடுவர் . சட்டம் ஒழுங்கு தேசிய அளவில் ஒரு அமைப்பின் கீழ். தீவிரவாதிகள் முக்கிய இடங்களில் உள்ளனர். மத்திய அரசு தாமதிக்கும் போது நாடு எங்கும் ஜெயிலர் உருவாகி விடுவர். விரைவில் 5000 மேற்பட்ட ஆதிக்க குழுக்கள் உருவாக்கி, சாது மக்களை அடிமைப்படுத்தி விடுவர். பிள்ளை வளர்ப்பு மிக கடினமானது.


Svs Yaadum oore
ஜன 18, 2025 17:43

அந்த ஆஸ்பத்திரியில் தினசரி கூலிக்கு வேலை பார்த்த தற்காலிக ஊழியர் தற்குறி குடிகாரன் ...அவன்தான் இந்த கொடூர கொலைக்கு காரணம் என்று சொல்லி இந்த வழக்கை ஊற்றி மூடி விட்டார்கள் .....மருந்து கொள்முதல் முதல் மருத்துவத்துறை மற்றும் கல்லுரி முழுக்க லஞ்ச ஊழல் ..விஷயம் வெளியே வர அந்த பெண் டாக்டர் பலிகடா ..இந்த கல்லுரி முதல்வர் இப்போது ஜாமினில் வெளியே ....... .ஆட்சியில் மேற்கு வங்க மேடம் உள்ளவரை பெண்ணை பெற்றவர்களுக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது


Svs Yaadum oore
ஜன 18, 2025 17:06

இந்த வழக்கே சரியாக விசாரிக்கப்படவில்லை ....இங்குள்ள 200 ரூபாய் பிரியாணி திராவிட கொத்தடிமை போல எவனோ ஒரு அடிமையை பலி கொடுத்து இந்த வழக்கை முடிக்க பார்க்கிறார்கள் ...முக்கியமான சாட்சியங்கள் தடயம் என்று அனைத்தும் அழிக்கப்பட்டது .....மருந்து கொள்முதல் முதல் மருத்துவத்துறை மற்றும் கல்லுரி முழுக்க லஞ்ச ஊழல் ....இந்த கல்லுரி முதல்வர் இப்போது ஜாமினில் வெளியே ....ஆட்சியில் மேற்கு வங்க மேடம் உள்ளவரை பெண்ணை பெற்றவர்களுக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 15:00

அவன் மட்டும்தான் குற்றவாளி ன்னு மேற்குவங்க போலீசும் கூடத்தான் சொன்னது ..... அப்போ சி பி ஐ எதுக்கு ? போராடும் டாக்டர்களை கூல் பண்ணுறதுக்கு இட்டாந்தீங்களா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 18, 2025 14:58

இப்பல்லாம் குற்றவாளி யாரு ன்னு - இந்த வழக்குல இவன் மட்டும் குற்றவாளியில்லை - தீர்ப்பு மட்டும் சொல்லிட்டு தண்டனை விபரம் சில நாட்களில் அறிவிக்கிறாங்களே ?? பேரம் பேச வசதி ஏற்படுத்தி கொடுக்கவா ??


Ramona
ஜன 18, 2025 14:58

அந்த அரக்கன் ,சாகும் வரை தூக்குலிட வேண்டும், அப்படிப்பட்ட தணடனையை தவிர வேற தண்டனை கொடுத்தால் ,அது நல்ல தீர்ப்பாகாது.


Jumbho 2
ஜன 18, 2025 16:34

இதில் சம்பத்தப்பட்ட ஒருவரும் தப்பிவிடக்கூடாது. ஆயிரக்கணக்கான உயிர்களை காக்கும் ஒரு மருத்துவரை ஈவு இரக்கம் இல்லாது கற்பழித்து கொன்ற கயவர்களை தூக்கில் ஏற்றியே ஆக வேண்டும்.