ஹலசூரு சுயம்பு காளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ஹலசூரு; ஹலசூரு மார்க்கெட்டில் உள்ள சுயம்பு காளி அம்மன் கோவிலில் இன்று முதல் பிப்., 3ம் தேதி வரை, ஸ்ரீவீரபத்ர சுவாமி பிரதிஷ்டையும், விமான கோபுரம், ராஜகோபுரம் மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது.இன்று காலை 8:00 மணி முதல், அம்மனுக்கு ஸ்ரீ மஹா காளி அம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு ஹோமங்கள் நடக்கின்றன. கலச பூஜை, மஹாமங்களாரத்தி, பிரசாத விநியோகம் நடக்கிறது.நாளை அம்மனுக்கு, ஸ்ரீ முத்துமாரி அம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது. காலை 8:30 மணி முதல் 9:10 மணி வரை, கும்ப லக்னத்தில் பூஜை, பெங்களூரு விபூதிபுரம் ஸ்ரீ விபூதிபுர வீர சிம்ஹாஸன சமஸ்தான மடத்தின் ஸ்ரீ மஹாந்தலிங்க சிவாச்சார்ய மஹா சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீ வீரபத்திர சுவாமி பிராண பிரதிஷ்டையும், பஞ்சாமிர்த அபிஷேகமும் நடக்கிறது.பிப்., 1ம் தேதி, அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடக்கின்றன. பிப்., 2ம் தேதி அம்மனுக்கு, ஸ்ரீ காளி அம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை கும்ப லக்னத்தில் மஹா கும்பாபிஷேகம், மஹா மங்களாரத்தி நடக்கும். மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.பிப்., 3ம் தேதி அம்மனுக்கு, ஸ்ரீ மஹா லட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, பார்த்திபன், சந்தானம் குடும்பத்தினர் செய்துள்ளனர்.