உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கும்பகர்ணன் தொழில்நுட்ப நிபுணர்: சொல்கிறார் கவர்னர் ஆனந்தி

கும்பகர்ணன் தொழில்நுட்ப நிபுணர்: சொல்கிறார் கவர்னர் ஆனந்தி

லக்னோ : ''கும்பகர்ணன், ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக துாங்குவார் என ராமாயணத்தில் கூறப்படுவது கட்டுக்கதை. அவர் ஒரு தொழில்நுட்ப நிபுணர். நவீன இயந்திரங்களை வடிவமைக்கும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டவர்,'' என, உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் பேசியதை எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.உத்தர பிரதேசத்தில் உள்ள கல்லுாரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில், அம்மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:ராவணனின் சகோதரர் கும்பகர்ணன், ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக துாங்கி, ஆறு மாதங்கள் விழித்திருக்கும் வழக்கம் உடையவர் என கூறப்படுவது கட்டுக்கதை. உண்மையில், கும்பகர்ணன் தொழில்நுட்பங்களை கரைத்துக்குடித்த நிபுணர்.அவரை ஆறு மாதங்கள் ரகசிய அறையில் தங்கியிருந்து இயந்திரங்களை தயாரிக்கும்படி ராவணன் உத்தரவிட்டு இருந்தார். வெளியே செல்லாமல் ஆறு மாதங்கள் அறைக்கு உள்ளே இருந்தால் தான், அந்த ரகசியங்கள் வெளியே கசியாது என்பதால் அவரைப் பற்றி அப்படியொரு கட்டுக்கதை பரப்பப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த, 'வீடியோ'வை சமூகவலைதளத்தில் பகிர்ந்த காங்., பிரமுகர் சுப்ரியா ஸ்ரீநாத், 'பட்டமளிப்பு விழாவில் பல்கலை மாணவர்களுக்கு சிறப்பான அறிவை கவர்னர் புகட்டியுள்ளர்' என, கிண்டல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
நவ 20, 2024 21:13

அப்புடி என்ன கண்டுபிடிச்சாரு கும்பகர்ணர்? ராவணன் கும்பகர்ணன், மண்டோதரி, விபீஷணன் பேரைப் பாத்தாலெ ஆரிய வந்தேறிங்க மாதிரி இருக்கு.


Ramesh Sargam
நவ 20, 2024 13:04

தெரியாமல் ஏதேதோ உளறக்கூடாது. கும்பகர்ணன் பற்றி இதுநாள் வரை கேள்விப்படாத ஒரு தகவலை இவர் சொல்லி மக்களை திசைதிருப்புவது சரியல்ல.


Rasheel
நவ 20, 2024 11:25

பாரதம் விஞ்ஞான துறையில் பலமடங்கு முன்னிலையில் இருந்தது. இன்னும் ஜெர்மனிய பல்கலை கழகங்களில் சமஸ்க்ருதம் - வேதம் மற்றும் உபநிடதம் பயிற்றுவிக்கபடுகிறது. பல வேத உபநிடத புத்தகங்களை அவர்கள் எடுத்து சென்று விட்டனர். கணிபொரிக்கு மிக தகுந்த மொழியாக சமஸ்க்ருதம் உள்ளது. வ்யமானிக சாஸ்திரம் மற்றும் பிருஹத் விமான சாஸ்திர போன்ற நூல்கள் வானவியல் பற்றியும், விமானங்கள் பற்றியும் விளக்கி சொல்கிறது.


ஆரூர் ரங்
நவ 20, 2024 10:37

சுப்ரியா ஸ்ரீநாதே இன்னும் யுனஸ்கோ மோசடிப் பட்டம் பற்றிய தமிழக பாடத்தை படிக்க வில்லையா? உங்க கூட்டணிக் கட்சிதான் அப்படி பாடத்தில் சேர்த்தது.


M Ramachandran
நவ 20, 2024 10:30

காங்கரஸ் காரணகளுக்கு புத்தி மட்டு. ரீல் விடுவதில் பொய் கதை புனைவதில் கில்லாடிகள். இவன் க ஊடும் ரீலில் மக்கள் வாய் பொளந்து ஈ வாய்ய்குள் போவது கூட தெரியாமல் மயங்கி தூங்கி விடுவார்கள்


S S
நவ 20, 2024 10:07

இனி இவர் புஷ்பக விமானத்திலேயே பறக்கட்டும். இன்றைய நவீன கால விமானங்களை இனி இவர் பயன்படுத்த மாட்டார் என நம்புகிறோம்.


Ray
நவ 20, 2024 18:32

ஐயோ புஷ்பக விமானத்தில் ஒரு ராவணன் வந்து விட போகிறார்.நாடெல்லாம் நிறைய ராவணர்கள்.


veeramani
நவ 20, 2024 09:39

மய்ய அரசின் தலைமை விஞ்ஞானியின் கருத்து, ராமாயணத்தில் பல விஞ்ஞான ரகசியங்கள் அடங்கியுள்ளன. மேதகு ஆளுநர் ஆனந்தி பெண் சொல்லியது உண்மைதான் . அகஸ்தியருக்கு ராவணனும் சிவனை கொண்டாடினார்கள் சிவ பக்தர்கள் சிவனுக்கு மிகவும் வேண்டியவர்கள். அகஸ்தியர் அவரின் காலத்தில் ராவணன் உடன் தண்ணீரை பிரித்து ஹைட்ரொகன் மற்றும் ஆக்ஸிஜன் வாய்வு கல் என்ஜினை ஊட்ட முடியும் என நிரூபித்தவர். ராவணன் சீதையை தூக்கி வந்த புஸ்பக விமானம் ஹைட்ரொகன் காசில் இயங்கியது அகஸ்தியர் எலெக்ட்ரோ கெமிஸ்ட்ரியை கரைத்து குடித்தவர் மனித உடைப்பு இயங்குவது இதில் ஆற்றலால் தான். இதனால் எவரையும் பல கால கோமா நிலைக்கு எடுத்து செல்ல முடியும். இதுதான் கும்பகர்ணன் விஷயத்தில் நடந்திருக்கலாம். எனவே விமானம் கண்டுபிடுத்தது அகஸ்தியருக்கு ராவணனும் தான் மேதகு ஆளுநர் சொன்னது மிகச்சரியானது


Barakat Ali
நவ 20, 2024 09:21

வித்தியாசமாக யாராவது பேசினால் சிரித்து எள்ளி நகையாடுவதை விட எந்த அடிப்படையில் அப்படிச் சொன்னீர்கள் என்று கேட்கணும் ......


VENKATASUBRAMANIAN
நவ 20, 2024 07:49

இவர்களுக்கு எல்லாம் எங்கே என்ன பேசவேண்டும் என்று கூட தெரியாதா


Dharmavaan
நவ 20, 2024 06:40

இதிலென்ன சிறப்பு கெட்டுவிட்டது . ஜிகாதியை ஆதரிக்கும் அறிவிலிக்களுக்கு புரியாது இவை எல்லாம்


புதிய வீடியோ