உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆய்வு கூடத்தில் உருவாகும் மீன் இறைச்சி

ஆய்வு கூடத்தில் உருவாகும் மீன் இறைச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: நாட்டில் முதன்முறையாக, ஆய்வுக்கூடத்தில் வைத்து மீன் இறைச்சியை தயாரிக்கும் முயற்சியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து தேசிய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:மீன் இறைச்சிக்கான தேவை அதிகரிப்பதை பூர்த்தி செய்யவும், கடல் வளங்கள் மீதான அதிகப்படியான அழுத்தத்தை தணிக்கவும், ஆய்வுக்கூடங்களில் மீன் இறைச்சி தயாரிக்கும் திட்டம் வகுக்கப்பட்டது. ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மீன் இறைச்சி, குறிப்பிட்ட செல்களை மீனில் இருந்து தனிமைப்படுத்தி, விலங்கு கூறுகள் இல்லாமல், ஆய்வக அமைப்பில் வளர்ப்பதன் வாயிலாக உருவாக்கப்படுகிறது. இதன் இறுதி வடிவம், மீனின் அசல் சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து குணங்களை உடையதாக இருக்கும். இது போன்ற முயற்சி நாட்டில் முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, தேசிய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'நீட் மீட் பயோடெக்' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பாரதி
ஜன 30, 2024 13:25

போச்சுடா.. கோழி சாப்பிடுறவன் வாழ்க்கையில மண்ண அள்ளி போட்டாச்சு. அடுத்து, மீன் சாப்பிடறவன் வாழ்க்கை .... முடிந்தது....


அப்புசாமி
ஜன 30, 2024 11:52

வெஜிடேரியன் மீன். உயிர்க்கொலை கிடையாது. சாப்புட சூப்பரா இருக்கு. சைவர்களும் சாப்பிடலாம்.


saravan
ஜன 30, 2024 10:42

பேசாம பசிக்காம இருக்க ஏதாவது செல்ல கண்டுபிடிச்சிட்டா போதும், நாளொன்றுக்கு மூன்று காட்டிங்கிற்கு மட்டும் உள்ளதா போதும், எதுக்கு இந்த தேவை இல்லாத ஆராய்ச்சி மக்களை உழைக்க விடுங்க சார்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 08:10

ஆய்வுக்கூடத்தில் திராவிட மாடலுக்கு எதிரா வெங்காய மாடல் ன்னு ஒன்னு உருவாக்க முடியாதுங்களா ??


ராமகிருஷ்ணன்
ஜன 30, 2024 06:49

பிராய்லர் கோழிகளால் மனிதனுக்கு பற்பல நோய்கள் வருகின்றன. அதன் வளர்ச்சிக்கு போடப்படும் ஊசி மருந்து இளவயதில் பெண்கள் பூப்படைய வைக்கிறது என்கிறார்கள். இந்த மீன்கள் விஷயத்தில் இந்த மாதிரி நடக்கும். மனிதர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று உறுதி செய்து பின்னர் விற்பனை செய்ய வேண்டும்.


Muralidharan raghavan
ஜன 30, 2024 10:40

கரெக்ட்


சுலைமான்
ஜன 30, 2024 04:19

மோடி அரசின் மீது உள்ள நம்பிக்கை மீனவர்களுக்கு குறைந்துவிடும். ஏற்கெனவே இறால் மற்றும் மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களால் கடல் மீன்கள் சரியான விலையை எட்டுவதில்லை. இது போன்ற ஆய்வக மீன் வளர்ப்பின் மூலம் பெரு முதலாளிகள் வளர்வார்களே ஒழிய மீனவர்களுக்கு அழிவு தான்..... மக்கள் மீது அக்கறை உள்ள அரசு என்றால் மத்திய அரசு இந்த திட்டத்தை இழுத்து மூட வேண்டும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ