உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை: இந்திய விமானிகள் சங்கம் நிராகரிப்பு

விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை: இந்திய விமானிகள் சங்கம் நிராகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையை நிராகரிக்கிறோம்,'' என இந்திய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பான ஏஏஐபி விசாரணை நடத்துகிறது. முதற்கட்ட விசாரணை அறிக்கையை அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ளது.அந்த அறிக்கையில்,இதுதவிர, விமானிகளின் கடைசி நேர கலந்துரையாடல் பற்றியும், அவர்களின் பேசியதில் இடம்பெற்ற விஷயங்கள் என்ன என்பது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 இன்ஜின்களும் செயலிழந்துள்ளது. ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார் என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பாக இந்தியா விமானிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விசாரணை நடக்கும் தொனியும், திசையும், விமானிகள் மீது தான் தவறு என்ற ஒரு தலைபட்சமாக செல்கிறது. இந்த அனுமானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.பொறுப்பான அதிகாரி கையெழுத்து அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. விசாரணை ரகசியமாக நடைபெறுவதால், அதில் வெளிப்படைத்தன்மை இல்லாததுடன், அதன் நம்பகத்தன்மை மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. அனுபவம் வாய்ந்த விமானிகள் இன்னும் விசாரணைக்குழுவில் சேர்க்கப்படவில்லை. இவ்வறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
ஜூலை 12, 2025 18:04

ஊத்தி மூடுறதுன்னு முன்னமேயே முடிவெடுத்திருந்தா நாம என்ன செய்ய முடியும். இது கர்மபூமி.


என்றும் இந்தியன்
ஜூலை 12, 2025 18:03

விமானம் புறப்படும் முன்பு அதை சரிபார்க்கும் நபர்கள் வேண்டுமென்றே லஞ்சம் வாங்கிக்கொண்டு கீழிருந்து கொண்டே அந்த எரிபொருள் வாழ்வை அடைத்து வைத்துள்ளார்கள். ஆகவே தான் விமானம், அந்த வால்வு அடைப்பிலிருந்து என்ஜின் வரை உள்ள டியூபில் உள்ள எரிபொருளை கொண்டு பறந்தது. வால்வு மூடப்பட்டதால் எரிபொருள் வரவில்லை. இது தானே நடந்தது அல்லவே அல்ல. திட்டமிட்டு இந்த வால்வு மூடுதல் கீழிருந்து செய்யப்பட்டது.


Kundalakesi
ஜூலை 12, 2025 20:03

அது என்ன ஸ்கூட்டரா, ஏரோபிளைன் ஆன் செய்து அரைமணி நேரம் கழித்து தான் புறப்படுவார்கள்.


Sudha
ஜூலை 12, 2025 17:49

ஆக, வால்வு அடைபட்டிருந்தது தான் விபத்திற்கு காரணம். எரிபொருள் நிரப்ப பட்டுள்ளது. அதை மூடும் செயல் யாருடைய பொறுப்பில் இருந்தாலும் அவர்களே பதில் சொல்ல வேண்டும். ஓடும் விமானத்தில் வால்வை திறக்கவோ மூடவோ முடியுமா?


அசோகன்
ஜூலை 12, 2025 17:49

திமுக தனக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்றால் நீதிபதியை வாய்க்கு வந்தப்படி வசை பாடுவார்கள் அதே போல உள்ளது இவர்கள் கோரிக்கையும்


spr
ஜூலை 12, 2025 17:21

பொறுப்பான அதிகாரி கையெழுத்து அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இது உண்மையாக இருந்தால் விசாரணை அவசியம் நாட்டின் மதிப்பு பாதுகாப்பு கருதி ரகசியத் தன்மை அவசியமே ஆனால் விசாரிப்பவர்கள் அந்தத் துறை வல்லுனராக இருக்க வேண்டுவது அவசியம் அந்த ஒரு மனிதர் மட்டும் குறைந்த காயங்களுடன் உயிருடன் தப்பியது நம்பமுடியவில்லை. விசாரணைக்குரியதே


Varadarajan Nagarajan
ஜூலை 12, 2025 17:06

விமானிகளின் உரையாடல் ஒவோன்றும் CVR ல் பதிவாகும். அதை யாரும் மாற்றமுடியாது, திருத்தமுடியாது. அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மறுவிசாரணை செய்யமுடியும். எரிபொருள் வால்வை வேண்டுமென்றே அடைத்தீர்கள் என்று குறிப்பிடவில்லை. அடைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து துணை விமானியை கேட்டுள்ளார் அவரும் தான் அடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். விமானம் ஓடுபாதையில் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு அந்த வால்வு அடைக்கப்பட்டிருந்தால் விமானம் முழு ரன்வேயையும் கடந்து 300 அடி உயரம் மேலெழும்பியிருக்கமுடியாது. வேறு ஏதும் காரணங்களால் அந்த வால்வு அடைக்கப்பட்டதா என தீவிர விசாரணை தேவை. இது உழுமையான இருந்து அறிக்கை இல்லை. மேற்கொண்டு விசாரணை முறையாக நடந்து இதுபோன்ற விபத்துகள் மீண்டும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 12, 2025 17:01

வீட்டுக்குள் நுழையும் கரப்பான்பூச்சியைகூட வீடியோ ரெகார்ட் செய்து, நேரடி ஒளிபரப்பும் இந்தக்காலத்தில் இன்னும் விமானிகளின் காக்பிட்டுக்குள் நடப்பவற்றை, குறிப்பாக டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் சமயத்திலாவது, வீடியோ ரெகார்ட் செய்து நேரடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு ஒளிபரப்பு செய்யலாம். அப்படியே ரெக்கார்டும் செய்யலாம். இப்போதுதான் விமானம் பறக்கும்போதுகூட சாட்டிலைட் மூலம் இன்டெர்நெட் இணைப்பு வசதி கிடைக்கிறதே? சாதாரண ஏடிஎம் செக்யூரிட்டி சர்வைலன்ஸ் கேமரா செய்யும் வேலை. விமானங்களில் இல்லை என்பது நம்பும்படி இல்லை. வேண்டுமென்றே தவிர்பது போலவே தோன்றுகிறது.


naranam
ஜூலை 12, 2025 16:54

விமானிகள் இருவரும் பேசியது பதிவாகியிருக்கும் போது அதைப் பற்றி புகார் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்? எரிபொருள் வால்வுகளைத் தான் மூடவில்லை என்று மற்ற விமானி பதிலளிப்பதையும் தான் மறைக்காமல் வெளியிட்டுள்ளனர். விமானிகள் மீது இதுவரை எந்தக் குற்றச் சாட்டையும் வைக்கவில்லை. விஷயம் இப்படியிருக்கும் போது விமானிகள் சங்கம் எதற்கு இத்தகைய அறிக்கையை வெளியிட வேண்டும்? சங்கம் இருப்பதால் தானோ? முதலில் கருப்புப் பெட்டிகளின் ஆராய்ச்சி மற்றும் விசாரணை இந்தியாவில் தான் நடைபெற வேண்டும் என்று கேட்டதும் அவர்கள் தானே!


visu
ஜூலை 12, 2025 16:37

விமானிகள் பேசியதில் எந்த சந்தேகமும் இல்லை அதை மறைக்கவும் முடியாது வேற என்ன வாய்ப்புகள் என்று விமானிகள சங்கம் சொல்லவேண்டும்


SANKAR
ஜூலை 12, 2025 16:45

yes ..you are right.if it is design defect dozens of such accidents could have happened over decades since this aircraft came to market.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை