உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுக்கட்சி துவங்கினார் லாலு மகன் தேஜ் பிரதாப்

புதுக்கட்சி துவங்கினார் லாலு மகன் தேஜ் பிரதாப்

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவரது தம்பி முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன், தேஜ் பிரதாப் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், 'ஜன் சக்தி ஜனதா தளம்' என்ற புதிய கட்சியை துவங்கி உள்ளதாக, சமூக வலைதளத்தில் தேஜ் பிரதாப் நேற்று அறிவித்தார். மேலும், தேர்தல் சின்னமாக, 'கரும் பலகை' கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த கட்சியின் பதிவு மற்றும் சின்னம் தொடர்பாக எதுவும் தெரியாது என, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன. பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், புதுக்கட்சி துவங்கி உள்ளதாக தேஜ் பிரதாப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை