உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு இலவச நிலம் ஒதுக்கப்பட்டதா: சட்டசபையில் கேள்வி

காஷ்மீரில் முத்தையா முரளிதரனுக்கு இலவச நிலம் ஒதுக்கப்பட்டதா: சட்டசபையில் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், தொழிற்சாலை அமைக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது.இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவர் செவ்லான் குளிர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ரூ. 1,500 கோடியில் அலுமினியம் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போடப்பட்டு உள்ளது. தற்போது, இந்த விவகாரம் வெளியாகி சட்டசபையில் விவாதத்தை கிளப்பி உள்ளது.சட்டசபையில் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தாரிகாமி ,' இது முக்கியமான விஷயம். இது குறித்து விசாரிக்க வேண்டும்' என்றார்.காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜிஏ மிர் கூறுகையில், இந்தியர் அல்லாதவருக்கு இலவசமாக பணம் கொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜாவேத் அஹமது தர், இது வருவாய்த்துறை தொடர்பானது. எங்களிடம் எந்த தகவலும் இல்லை. உண்மையை அறிய விசாரணை நடத்துவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kanns
மார் 10, 2025 09:10

Mega Loot All Party Politicians-Officials Will Sell Even Mother Land for Money Favours etc etc. Arrest & Strip Citizenship of All Such Politicians-Officials etc. SHAMEFUL DEMOCRACY


rama adhavan
மார் 09, 2025 20:54

இவரது மனைவி இந்தியன். தமிழர். எனவே அவர் காஷ்மீரில் தற்போதைய சட்டப்படி தாராளமாக அவரது பெயரில் நிலம் வாங்க தடை எதுவும் இல்லை.


Appa V
மார் 09, 2025 19:42

நிலத்தை குறிப்பிட்ட காலத்துக்கு லீசில் தான் கொடுக்கலாம்..மெரினா சமாதிகள் தான் இலவச இடத்தில ..


ஆரூர் ரங்
மார் 09, 2025 19:30

அரசு நிலத்தை ஆலைகள் அமைக்க நீண்டகால குறைந்த குத்தகை அடிப்படையில் கொடுப்பது வழக்கம்தானே? வேலைவாய்ப்பையும் வரிவருவாயையும் பெருக்க இது தேவைதான்.துணிச்சலாக காஷ்மீரில் சட்டபூர்வ தொழில் துவக்குவதற்கு பாராட்டுகள்.


Mecca Shivan
மார் 09, 2025 19:26

கயட்டோரோச்சி இந்தியரா ? அவருக்கு கோடிகளில் கமிஷன் கொடுத்து அதிகவிலையில் பீரங்கி வாங்கிய பப்பு கும்பலுக்கு இவ்வளவு கோவமா ? ..


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 09, 2025 23:40

வெளிநாட்டவருக்கு கமிஷன் கொடுப்பது வேறு வெளிநாட்டவருக்கு இடம் இலவசமாக கொடுப்பது வேறு. 2015 -2017 ல் பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கிய தளவாடங்களும் கமிஷன் கொடுத்தே வாங்கப்பட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை