உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் பதுக்கிய கண்ணிவெடிகள் பறிமுதல்

பயங்கரவாதிகள் பதுக்கிய கண்ணிவெடிகள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் அருகே சமீபத்தில் ராணுவ வாகனம் மீது, பயங்கரவாதிகள், நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து, இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பூஞ்ச் மாவட்டத்தின் பல்னோய் செக்டார் பகுதியில் நம் ராணுவமும், சிறப்பு போலீஸ் படைப்பிரிவினரும் இணைந்து நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயங்கரவாதிகளின் மறைவிடம் இருப்பது தெரியவந்தது. அங்கு நடத்திய சோதனையில் கையெறி குண்டுகள், கண்ணிவெடிகள் ஆகியவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ