உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கத்ரா: ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குதிரை சவாரி மூலம் யாத்திரை செல்லும் வழியான குல்சான் கா லங்கர் அருகே உள்ள பங்காங்கா பகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zfxr6d65&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலச்சரிவில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த குப்பன், 70, அவரது மனைவி ராதா, 66, ஆகியோர் உள்பட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், குப்பன் உள்பட இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மண் மற்றும் கற்களை உடனடியாக அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக மதியம் 1 மணி வரையில் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Padmasridharan
ஜூலை 22, 2025 09:08

சில இடங்களில் விளக்கு இல்லாமலும் அந்த இடங்களில் பாதையில் குழி இருந்தும் காணப்படும். அதில் விழுவதிலிருந்து நானும் தப்பித்து இருக்கிறேன் சாமி. பாதைகள் மாற்றி அமைக்கவேண்டும் அவர்கள்


அமர்
ஜூலை 21, 2025 16:34

ஜெய் வைஷ்ணோ தேவி...


Jack
ஜூலை 21, 2025 13:48

மழைக்காலம் ..அந்த மலைப்பகுதிகள் திருச்சி மலைக்கோட்டை பொன்மலை மாதிரி கிடையாது ...எங் மவுண்டன் என்று அழைக்கப்படும் சாப்ட் வகை ... அமர்நாத் பகுதிகளும் அதே ரகம்


சமீபத்திய செய்தி