மேலும் செய்திகள்
ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு
14-Oct-2025
மூணாறு: தேவிகுளம் இறைச்சல்பாறை பகுதியில் ரோட்டில் சரிந்து கிடக்கும் மண்ணை அகற்றாததால், மண் சரிவு அபாயத்தில் 25 குடும்பங்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர். கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல்பாறையில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி பகுதியில் கடந்தாண்டு ஜூலை 30ல் மண் சரிவு ஏற்பட்டது. அங்கு மலை மீது நீண்ட விரிசலும் ஏற்பட்டதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதியின் கீழ் 25 குடும்பங்கள் வசிக்கின்றனர். மண்சரிவு ஏற்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் மண், கற்கள் ஆகியவற்றை அகற்றவில்லை. அதனால் அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. தவிர தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ரோட்டில் கிடக்கும் மண், கற்கள் குடியிருப்புகள் மீது சரிந்து விழ வாய்ப்புள்ளதால் 25 குடும்பங்கள் நிம்மதி இழந்து தவித்து வருகின்றனர். சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையம் ரோடு பராமரிப்பு பணிகளுக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியது. இருப்பினும் ரோட்டில் சரிந்து கிடக்கும் மண்ணை அகற்றவில்லை என்பதுடன் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யவில்லை. அதனால் இறைச்சல்பாறை பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் போராட்டங்களை நடத்த ஆலோசித்து வருகின்றனர்.
14-Oct-2025