உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லேசரில் செயல்படும் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதம் சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் சாதனை

லேசரில் செயல்படும் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதம் சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்தியாவின் போர் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் வடிவமைத்த லேசர் அடிப்படையிலான ட்ரோன் எதிர்ப்பு ஆயுத சோதனை வெற்றிகரமாக நடந்தது.டி.ஆர்.டி.ஓ., அதிகாரி கூறியதாவது: இந்த அதிநவீன அமைப்பு, விநாடிகளில் பறக்கும் ட்ரோன்களை துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டது. லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பு, சோதனை நடத்தியதில்,பல ட்ரோன்களை முறியடித்தது மற்றும் எதிரி கண்காணிப்பு சென்சார்களை அழித்தது.இந்த அதிநவீன அமைப்பு மின்னல் வேகத்தில் துல்லியமாக சில நொடிகளுக்குள் இலக்கை தாக்கி அழித்தது.லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பின் இந்த சோதனையால்,உயர் சக்தி லேசர்-டியூ தொழில்நுட்பத்தைக் கொண்ட அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இணைந்துள்ளது.உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 30 கிலோவாட் எம்.கே -II(A) லேசர்-இயக்கப்பட்ட ஆயுதம் அமைப்பு, கர்னூலில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையம்,கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்திய தொழில்களுடன் இணைந்து வடிவமைத்து உருவாக்கப்பட்டது.இவ்வாறு டி.ஆர்.டி.ஓ., அதிகாரி கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Karthik
ஏப் 14, 2025 09:30

வாழ்த்துக்கள் டி.ஆர்.டி.ஓ..


Karthik
ஏப் 14, 2025 09:29

வாழ்த்துக்கள் இஸ்ரோ...


Kasimani Baskaran
ஏப் 14, 2025 03:58

சிறப்பு... வாழ்த்துகள்.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 14, 2025 00:15

யூ டியூபில் சாதாரண தனி நபர்கள் இதை செய்து செயல் விளக்கம் தருகிறார்கள். விங்gnaaன சாதனை


சமீபத்திய செய்தி