உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனுமதியின்றி சட்டப்படிப்பு: தனியார் பல்கலை மீது வழக்கு

அனுமதியின்றி சட்டப்படிப்பு: தனியார் பல்கலை மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ:உத்தர பிரதேசத்தின் பாரபங்கியில் உள்ள ஸ்ரீராம் ஸ்வரூப் நினைவு பல்கலைக்கு எதிராக அனுமதியின்றி சட்டப்படிப்பு நடத்தியதாக மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் பாரபங்கியில் உள்ள ஸ்ரீராம் ஸ்வரூப் நினைவு பல்கலையில் அனுமதியின்றி சட்டப்படிப்பு நடத்துவதாக கூறி, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் கடந்த 1ல் போராட்டம் நடத்தினர். இது குறித்து அயோத்தி டிவிஷனல் கமிஷனர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதன்படி உ.பி., உயர் கல்வி கமிஷன் துணை செயலர் தினேஷ் குமார், பாரபங்கி நகர போலீசில் ஸ்ரீராம் பல்கலை மீது புகார் அளித்தார். அந்த புகாரில், 'சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்புதல் பெறாமல் கடந்த 2023- - 24 மற்றும் 2024 - -25ம் கல்வி ஆண்டுகளில் சட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தியதுடன், தேர்வும் நடத்தி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடிய ஸ்ரீராம் ஸ்வரூப் நினைவு பல்கலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அந்த பல்கலை மீது மோசடி, ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sundar
செப் 06, 2025 22:22

எல்லாம் ஃபிராடு வேலையும் தில்லாலங்கடி வேலையும் அங்கதான் நடக்கும அவர்கள் எப்போதும் இந்த இந்தியாவுக்கு உதாரணம்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 05, 2025 01:39

“MA ஆல் பொலிட்டிகல் சயின்ஸ்” டிகிரி தர்றாங்களா?


SANKAR
செப் 05, 2025 06:10

that is gujarath speciality


SANKAR
செப் 05, 2025 01:06

thiruttu theeyamooka aatchi in UP or oopis? responsible for this!


முக்கிய வீடியோ