உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டங்களை முறையாக அமல்படுத்தணும்; புனே பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு சந்திரசூட் கண்டனம்

சட்டங்களை முறையாக அமல்படுத்தணும்; புனே பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு சந்திரசூட் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: புனேயில் பஸ்சில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் கண்டனம் தெரிவித்துள்ளார்.புனேயில் 26 வயதான பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ் ஒன்றில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zckeq3ai&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெண்களுக்கு எதிரான குற்றங்களை சட்டங்கள் உருவாக்குவதன் மூலம் மட்டும் தடுக்க முடியாது. பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைத் தடுக்க பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை முறையாக அமல்படுத்துவது அவசியம். நிர்பயா சம்பவத்தை தொடர்ந்து சட்டங்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏராளமான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் பெண்கள் பாதுகாப்பாக உணரப்படுவார்கள். சரியான விசாரணை, வலுவான நடவடிக்கை, விரைவான தண்டனை ஆகியவை அவசியம்.இது நீதிமன்றம் மற்றும் போலீசாரின் மிகப்பெரிய பொறுப்பு. ஒவ்வொரு சூழ்நிலையிலும், பெண்கள் தங்கள் வேலைகளை பாதுகாப்பாகச் செய்ய நாம் இதைப் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும். இதுதான் ஒரு சமமான சமூகத்தின் அடிப்படை. இவ்வாறு சந்திரசூட் கூறினார்.

குற்றவாளி கைது

புனேயில் 26 வயதான பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ் ஒன்றில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்தனர். குற்றம் சாட்டப்பட்ட தத்தாத்ரே ராம்தாஸ் காடே, ஷிரூரில் ஒரு பண்ணையில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kanns
பிப் 28, 2025 18:53

False News. What ExCJI told Yesterday Times is Tough Laws Not Deterring Crimes. GenuineGrave Offences Must be Investigated& TriedFast UnBiasedly & Punished IF Material Evidences& Circumstances Exists Witnesses are mostly Cookedup. BUT As 50% are FalseCases Vestedly Cookedup by Case-Vote-News-Power Hungry & PowerMisusing GraveCriminalConspiringGangs incl FalseComplainants, Sack& Punish All Judges NOT PUNISHING them


C.SRIRAM
பிப் 28, 2025 12:32

ஏதோ நீதிமன்றங்களுக்கு தொடர்பில்லாதது போல பேசுகிறார் . ஒரு மாதத்துக்குள் விசாரணை குதித்து தண்டனை என்பதை நீதிமன்றங்கள் ஏன் அமல் படுத்த மறுக்கிறார்கள் ?. தாமதப்பட்ட நீதி வீண் .


Nandakumar Naidu.
பிப் 28, 2025 09:35

குற்றவாளி இன்னுமா உயிரோடு இருக்கிறான்? என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டியது தானே.


Just imagine
பிப் 28, 2025 09:25

ஒரு வருடத்திற்கும் மேலாக குற்றத்தை சரியாக புலனாய்வு செய்து கண்டுபிடிக்காத , அதை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியின் சம்பளத்தில் பாதியை குறைக்கலாம். ஒரு வருடத்திற்கும் மேலாக குற்றத்தை சரியாக விசாரித்து தீர்ப்பை வழங்காத நீதிபதியின் சம்பளத்தில் பாதியை குறைக்கலாம் ..... அவ்வாறு நடைபெற்றால் விரைவான தீர்ப்பினால் பெரும்பாலும் குற்றங்கள் குறையும்.


sankaranarayanan
பிப் 28, 2025 09:18

நீ நீதிபதியாக இருந்தபோதே பாலியல் கொடுமைகள் கணக்கிலடங்காதனவாக இருந்தன அப்போதெல்லாம் இவர் வாயை திறக்கவே இல்லை இப்போ எத்தியோ புதிதாக கிளம்பினா மாதிரி பேசிறாரு கம்முமுனு கிடையா இப்போது இருக்கும் நீதி மன்றங்கள் பார்த்துக்கொள்ளும்


Amar Akbar Antony
பிப் 28, 2025 08:20

ஐயா இதென்ன கொடுமை? பேருந்தில் நடந்தால் வாயை தொறக்கும் உங்களைப்போல் உள்ள பெரியவர்கள் பத்திரிகைகள் அண்ணா பல்கலைகளில் நடந்த சமயம் ஒன்றும் சொல்லவில்லையே? அனால் where is Sir?


rajan_subramanian manian
பிப் 28, 2025 07:45

ஜாமீன் கொடுத்து ஊரை கெடுத்தவர்கள் உபதேசம் செய்கிறார்கள்


ஜெய்ராஜ்
பிப் 28, 2025 07:28

இவுரு நீதிபதியா இருந்தப்பவும்.இப்பிடித்தான் இருந்திச்சு. ரிடையராகி வூட்டில் ஓய்வெடுக்காம கடுப்பேத்துராரு.


A Viswanathan
பிப் 28, 2025 09:14

இவர் நீதிபதியாய் இருந்தப்போ அதை கடைபிடித்தாரா.


baala
பிப் 28, 2025 10:19

அப்படி இல்லை. நானும் இருக்கிறேன் இன்னும் ஒரு பதவியும் கொடுக்கவில்லை என்பதன் மனவருத்தம்.


புதிய வீடியோ