உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண மூட்டை வழக்கில் சிக்கிய நீதிபதி விசாரணைக்கு உதவ வக்கீல்கள் நியமனம்

பண மூட்டை வழக்கில் சிக்கிய நீதிபதி விசாரணைக்கு உதவ வக்கீல்கள் நியமனம்

புதுடில்லி : பண மூட்டை வழக்கில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு உதவ, இரண்டு வழக்கறிஞர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு, டில்லியில் சொந்தமாக உள்ள வீட்டில், மார்ச் 14ல் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு பணியின் போது ஓர் அறையில் இருந்து பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக, 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் நடத்திய விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. பதவி விலகும்படி உச்ச நீதிமன்றம் அவரை கேட்டுக் கொண்டது. ஆனால் அவர் முரண்டு பிடித்தார். கடந்த ஜூலை - ஆகஸ்டில் நடந்த பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, பா.ஜ., மற்றும் காங்., உட்பட எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தனர். இதை ஏற்ற அவர், உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் தலைமையில், விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு உதவுவதற்காக, வழக்கறிஞர்கள் ரோஹன் சிங், சமீக் ஷா துவா ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். குழுவின் விசாரணை முடியும் வரை, அவர்கள் ஆலோசகர்களாக தொடர்வர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Subash BV
செப் 27, 2025 16:21

SHAMELESS story. Imagine if happened to a common man. Understand why our courts are LOITERING cases for decades,even if its simple. BHARATHIES WAKE UP.


joe
செப் 24, 2025 15:33

ஊழல் நீதிபதியை தூக்கி ஜெயிலில் போடுங்கள் .


joe
செப் 24, 2025 15:27

"AI" தொழில் நுட்பத்தில் இந்த நீதிபதியின் முகத்தை தேய்த்துப்பாருங்கள் ,இவனோட முகமே ஒரு திருட்டு முகம் ஆகும் என்பதை AI நிரூபிக்கும் .


joe
செப் 24, 2025 15:19

தேச துரோகியே இவன்தான்


joe
செப் 24, 2025 14:12

நீதிபதியின் இந்த பண ஊழல் நீதித்துறைக்கே ஒரு மாபெரும் அவமானம் .இந்த சூழ்நிலையில் அந்த தேச துரோக நீதிபதியை பதவி நீக்கி அதற்குண்டான தண்டனையையும் உடனே வழங்காமல் இருப்பது இந்திய நாட்டுக்கும் நீதித்துறைக்கும் மாபெரும் அவமான மட்டும் அல்ல நாட்டின் இறையாண்மையை அவமதிப்பதே ஆகிறது .


Gajageswari
செப் 24, 2025 12:35

இந்த நாடு நாசமாக தான் போகும்.


கண்ணன்
செப் 24, 2025 09:10

இந்த மாதிரியானவர்களுக்காகவே அபிஷேக் மனு ஸிங்வி, கபில் ஸிபல் உள்ளனரே!


அப்பாவி
செப் 24, 2025 09:00

மூணே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியவர். நீதி சந்தி சிரிக்கிது. கொஞ்சநாளில் இவர் நிரபராதின்னு சொல்லி ....


பேசும் தமிழன்
செப் 24, 2025 07:48

இந்திய நாட்டில் என்ன சட்டதிட்டங்கள் இருக்கின்றன என்றே தெரியவில்லை. அனைவரும் சமம் என்றால் ஒரு குற்றவாளியை தண்டிக்க முடியாத அளவுக்கு சட்டத்தில் ஓட்டைகள் இருக்கிறது என்றால்.. முதலில் அந்த சட்டத்தை திருத்த வேண்டும்.


Ravi Kulasekaran
செப் 24, 2025 11:08

நான் திரும்ப திரும்ப கூறி கொள்வது நீதிபதிகள் அதாவது குறிப்பாக உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கடவுள்கள் அல்ல


Kanns
செப் 24, 2025 06:14

For Better Fast UnBiased Quality CheapCost Justice, Appoint Only Affected NonAdvocateCitizens as Judges With Post-Selection LawTrainings & Promotions Till SC Only on above Merits


சமீபத்திய செய்தி