உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசுக்கு எதிர்ப்பு: கேரளாவில் 19ம் தேதி கடையடைப்பு போராட்டம்

மத்திய அரசுக்கு எதிர்ப்பு: கேரளாவில் 19ம் தேதி கடையடைப்பு போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து நிதி தரவில்லை என மத்திய அரசை கண்டித்து வரும் 19 ல் கேரளாவில் கடையடைப்பு போராட்டம் நடத்த மாநிலத்தை ஆளும் அரசும், எதிர்க்கட்சி கூட்டணியும் அறிவித்து உள்ளன.கேரள மாநிலம் வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை மாதம் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிப்பதோடு ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில அரசு கடிதம் எழுதி உள்ளது. ஆனால், நாட்டில் எந்த பேரிடரையும் தேசிய பேரிடராக அறிவிக்க தற்போதுள்ள எஸ்.டி.ஆர்.எப்., மற்றும் என்.டி.ஆர்.எப்., விதிமுறைகளில் மாற்றமில்லை. நிவாரண பணிகளை மேற்கொள்ள கேரள அரசிடம் போதிய நிதி உள்ளது என மத்திய அரசு கூறியது.இதற்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நிதி அளிக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 19ம் தேதி கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அம்மாநிலத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அறிவித்து உள்ளது.அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து அதேநோளில் கடையடைப்பு போராட்டம் நடக்கும் என காங்கிரஸ் கூட்டணி அறிவித்து உள்ளது.அன்றைய தினம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.V. Iyer
நவ 16, 2024 04:27

படித்த மக்கள் தேர்ந்தெடுப்பது ஒன்றுக்கும் உருப்படி இல்லாத அரசுகளைத்தான்.. இது தமிழகமக்கள், கேரளா மக்களையும் சேர்த்துதான்..


இளந்திரையன் வேலந்தாவளம்
நவ 15, 2024 23:37

ஒரு வெங்காயத்த கூட தோலுரிக்க முடியாது ஏட்டன்


ராஜு
நவ 15, 2024 23:35

இதனால் கிடைக்கப்போகும் பையன் என்ன


புதிய வீடியோ