மேலும் செய்திகள்
ஷ்ரேயஸ் ஐயர் நலம்: உறுதி செய்தார் சூர்யகுமார்
5 hour(s) ago | 5
அல் கொய்தாவுடன் தொடர்பு; புனேவில் சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
7 hour(s) ago | 7
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கேரள மழை
7 hour(s) ago
பெங்களூரு : முதல்வர் சித்தராமையா, ராம பக்தரும் அல்ல, காந்தியின் விசுவாசியும் அல்ல. பதவிக்கும், பதவியை வழங்கும் காங்., மேலிடத்துக்கும் பக்தர், என எதிர்க்கட்சி தலைவர் அசோக் குற்றம்சாட்டினார்.இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று அவர் கூறியிருப்பதாவது:கன்னடர்களின் ராமபக்தி, ஹிந்துக்களின் ஒற்றுமையை கண்டு, சித்தராமையாவுக்கு, நடுக்கம் ஏற்பட்டுள்ளது, எங்களுக்கு தெரியும். லோக்சபா தேர்தலில் அதிகமான தொகுதிகளில், வெற்றி பெறாவிட்டால் சித்தராமையாவின் முதல்வர் நாற்காலிக்கு அபாயம் வரும். இனியாவது அவர் ராமனிடம் சரணடைய வேண்டும். ராமனின் பிறப்பு குறித்து கேள்வியெழுப்பி, ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை நிராகரித்த காங்கிரசுக்கு, கொடுத்த வாக்குறுதிபடி ராமர் கோவில் கட்டிய பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பேசும் அருகதை இல்லை.ராமன் சத்யவான். கொடுத்த வாக்குறுதியை மீறாத குணம் கொண்டவர். ஆனால் சித்தராமையா செய்தது என்ன. பிரித்தாளும் மனப்பான்மையை, ராமனின் விஷயத்திலும் காங்கிரஸ் காண்பித்துள்ளது. இதை சித்தராமையாவும் பின்பற்றி, பாவத்தை கட்டிக்கொள்ளாதீர்கள்.முதல்வர் சித்தராமையா, ராம பக்தரும் அல்ல, காந்தியின் விசுவாசியும் அல்ல. பதவிக்கும், பதவியை வழங்கும் காங்., மேலிடத்துக்கும் பக்தர். காந்தி பசுவதையை எதிர்த்தார். ஆனால் சித்தராமையா அதற்கு ஆதரவாக இருக்கிறார்.சுதந்திரத்துக்கு பின், காங்கிரசை கலையுங்கள் என, காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பத்துக்கு தாரை வார்த்துவிட்டனர். தற்போது சித்தராமையா வாயிலும், ராம நாமம் ஒலிக்கிறது. அவர் கோவிலுக்கு செல்வது மகிழ்ச்சியான விஷயம்.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 5
7 hour(s) ago | 7
7 hour(s) ago