உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்வெளியில் துளிர்த்த இலைகள்; படத்தை வெளியிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி

விண்வெளியில் துளிர்த்த இலைகள்; படத்தை வெளியிட்டு இஸ்ரோ மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆய்வுக்கருவியில், முளைத்துள்ள காராமணி (தட்டைப்பயிறு) செடிகளில் இலைகள் துளிர்த்துள்ளன.இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச., 30ம் தேதி விண்ணில் பாய்ந்தது. தற்போது பூமியில் இருந்து 500 கி.மீ., உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன.இதில், பி.ஓ.இ.எம்., 4 எனப்படும் சுற்றுவட்டப் பாதை பரிசோதனை அமைப்பில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், காராமணி எனப்படும் தட்டைப்பயிரின் எட்டு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன. சில தினங்களுக்கு முன், அவை முளைத்து துளிர் விடும் நிலைக்கு வந்துள்ளன. இந்தியாவின் விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்த சாதனை மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்து இருந்தது.இந்நிலையில், இன்று (ஜன.,06) விண்வெளியில் காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் புகைப்படத்தை வெளியிட்டு இஸ்ரோ கூறியிருப்பதாவது: பி.எஸ்.எல்.வி.,- சி 60 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆராய்ச்சிக்கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றி அடைந்தது. காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளது. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Senthoora
ஜன 06, 2025 16:11

இந்த பூமியில் விலைவதை வாங்க முடியல. அங்கு இருந்து கொண்டு வந்து என்ன விலைக்கு விக்க போறீங்க. அதையும் வாங்க போலிவுட் கூட்டம் இருக்கு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 06, 2025 17:40

சமச்சீர் அறிவாளியே .... திராவிடக் கொத்தடிமை கூக்கூ முட்டையே .... புலம்பாதே ..... இது உடனடியாக சாத்தியம் இல்லை .... விண்வெளியில் தட்டைப்பயறு விதைகளை வளர வைப்பதில் இந்த ரோபோடிக் கை கவனம் செலுத்தியதன் மூலம், மொத்தமாக ஒரே நேரத்தில் இஸ்ரோ இரண்டு பரிசோதனைகளை வெற்றிகரமாகச் செய்துள்ளது. ..... அதில் ஒன்று நுண்ணீர்ப்பு விசை சூழலில் விதையை முளைக்க வைப்பது. இரண்டாவது, தாவரத்தின் தேவையைக்கேற்றவாறு உதவும் இந்த ரோபோடிக் கையின் திறனைப் பரிசோதிப்பது ..... இஸ்ரோவின் இந்த முயற்சியின் மூலம், எதிர்காலத்தில் விண்ணில் நிறுவத் திட்டமிடப் பட்டுள்ள இந்திய விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களால் செய்ய முடியாத கடினமான பணிகளைச் செய்வதில் ரோபோடிக் கை உதவக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர் .....


புதிய வீடியோ