உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.639 கோடியில் 40 மாடி 2 சொகுசு பங்களாக்கள்; விலைக்கு வாங்கி அதிர வைத்த இந்திய பெண் தொழிலதிபர்

ரூ.639 கோடியில் 40 மாடி 2 சொகுசு பங்களாக்கள்; விலைக்கு வாங்கி அதிர வைத்த இந்திய பெண் தொழிலதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வொர்லி: இந்திய பெண் தொழிலதிபர் ஒருவர் ரு.639 கோடியில் சொகுசு பங்களாக்களை வாங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.நாட்டின் முக்கிய வர்த்தக நகரான மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் ஏராளம். இவை அனைத்தும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பெரும் தொழிலதிபர்களுக்கு சொந்தமானதாக இருக்கும். அப்படி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவர் ரூ.639 கோடியில் 40 அடுக்குமாடிகள் கொண்ட 2 சொகுசு பங்களாக்களை தமக்கு சொந்தமாக்கி கொண்டிருக்கிறார்.அவரது பெயர் லீனா காந்தி திவாரி. யுஎஸ்வி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர். வொர்லியில் நமன் சனா பகுதியில் அரபிக்கடலை பார்த்தபடி அவர் வாங்கிய உள்ள பங்களாக்களின் பரப்பளவு மட்டும் 22,572 சதுர அடி. ஒரு சதுர அடியின் விலை மட்டுமே ரு.2.83 லட்சம். பத்திரப்பதிவு ஆவணங்களின் படி இவர் செலுத்திய ஜி.எஸ்.டி., தொகை மட்டுமே ரூ. 63.9 கோடியாகும். ஒட்டு மொத்தமாக பார்த்தோமானால் கிட்டத்தட்ட லீனா காந்தி வாங்கிய 2 சொகுசு குடியிருப்புகளின் விலை ரூ.703 கோடி. இது இந்தியாவிலேயே மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்ட சொத்து என்று கூறப்படுகிறது.வொர்லியில் ஆடம்பர சொத்துகள் வாங்குவது என்பது புதிய விஷயமல்ல. அண்மையில் இதே வொர்யில் கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் மற்றும் அவரது குடும்பத்தினர் 22 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட ஒரு முழு சொகுசு குடியிருப்பு கட்டடத்தை வாங்கினர். அதன் விலை ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Kulandai kannan
மே 30, 2025 18:37

கூடிய விரைவில் காயாடு லோஹர் இதைவிட பெரிய பங்களா வாங்குவார்.


SUNDARESAN
மே 30, 2025 13:29

இந்த விஷயத்தை G SQUARE நிறுவனத்துக்கு மட்டும் தெரியாம பார்த்துக்கணும் இல்லைன்னா ஒரே இரவுல வந்து தூக்கிடுவாங்க.


Balasubramanian
மே 30, 2025 13:06

தனது திறமையால் நேர்மையாக சம்பாதித்த செல்வத்தில் ஒருவர் சொத்து வாங்கும்போது அது அவருக்கு மட்டும் பெருமையல்ல.. நேர்மையாளர்கள், திறமைசாலிகள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள மக்களுக்கும் ஒரு வாய்ப்பு.. இந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள் ...


Ramesh Sargam
மே 30, 2025 13:05

Take care my dear.


Kumar Kumzi
மே 30, 2025 12:47

ஆசியாவிலேயே பெரும்பணக்கார முதலையான கட்டுமர குடும்ப சொத்துக்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தகவல் ஏன்னா உண்மையாக உழைத்து வாங்கியவை ஹீஹீஹீ


Ramesh Sargam
மே 30, 2025 12:45

இப்படி ஓரு செய்தியை வெளியிட்டு எங்கள் கோல்மால்புர குடும்பத்தை உசுப்பு ஏத்திட்டீங்க. இனி அவர்கள் சும்மா இருப்பார்களா? இதைவிட அதிகமா சம்பாதிக்க மேலும் பல ஊழல்களை செய்வாங்க. இது நமக்கு தேவையா?


RAMAKRISHNAN NATESAN
மே 30, 2025 12:06

எங்க கோல்மால்புர மன்னர் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் சொத்து குவிக்கக்கூடாது .....


Ganesun Iyer
மே 30, 2025 11:49

அப்படிப்பட்ட பல பேருக்கு இந்த பங்களாவில் வேலை கிடைக்கும்..


Rathna
மே 30, 2025 11:37

தவறான எண்ணத்தில் பார்க்காமல் 700 கோடி சொத்தை வருடம் தோறும் பராமரிக்க 5% என்றால் ரூபாய் 35 கோடி செலவாகும். இதனால் கட்டிட காண்ட்ராக்டர், மேஸ்திரிகள், கூலி ஆட்கள், பெயிண்டர்கள், தச்சு வேலை செய்வோர், சிமெண்ட், பெயிண்ட், இரும்பு கம்பெனிகள் பயன் பெரும். இதனால் ஒரு சமுதாயமே வாழ வாய்ப்பு உண்டாகும்.


Rk
மே 30, 2025 10:49

கொள்ளை அடித்து வாங்கினால் மட்டுமே மக்களை அதிர வைக்க முடியும். உண்மையான உழைப்பினால் வாங்கிய சொத்திற்கு இப்பெண்மணி மிகசிறந்த முன்னுதாரணம். வாழ்க பெண்மணி வளர்க இந்தியா.


Karthik
மே 30, 2025 11:36

சரியாக சொன்னீர்கள் மிஸ்டர் ஆர் கே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை