உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி

வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வளர்ந்த இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம் என ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம், இன்று முதல் நாடு முழுதும் அமலுக்கு வந்தது. இதனால், வேளாண் பொருட்கள், குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள், ஏசி, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைகிறது.இந்நிலையில் இன்று (செப் 22) சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நவராத்திரி பண்டிகை, அனைவரின் வாழ்க்கையிலும் வலிமை, நம்பிக்கையை கொண்டு வரட்டும். நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. ஜிஎஸ்டி குறைப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியை பெறும்.ஜிஎஸ்டி குறைப்பு கொண்டாட்டத்துடன், சுதேசி மந்திரமும் இந்த நேரத்தில் புதிய சக்தியை பெறும். மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும். வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கிய உறுதியை அடைய நாம் ஒன்றிணைவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பஜனை பாடலை அனுப்புங்க!

பஜனை வீடியோ ஒன்றை வெளியிட்டு, மற்றொரு பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: நவராத்திரி என்பது பக்தியை பிரதிபலிக்கிறது. இந்தநேரத்தில், பண்டிட் ஜஸ்ராஜ் ஜியின் ஆத்மார்த்தமான ஒரு பாடலைப் பகிர்ந்து கொள்கிறேன்.https://x.com/narramodi/status/1969944161554927910நீங்கள் ஒரு பஜனை பாடியிருந்தால் அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒன்றைப் பாடியிருந்தால், தயவுசெய்து அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். வரும் நாட்களில் அவற்றில் சிலவற்றை நான் பதிவிடுவேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

GMM
செப் 22, 2025 14:06

குழந்தை தினமும் வளர்வது போல், நாடு ஒவ்வொன்றுக்கும் முதலில் விதிகள் வகுக்க வேண்டும். ஆளும் கட்சியின் அன்றாட பணி கொள்கை வகுப்பது, அதனை தற்காலிக சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைப்பது. ஆளும் கட்சியின் கொள்கை முடிவு, நீதிமன்ற விசாரணை கொலிஜியம் முறை வகுக்க பட்ட விதியின் கீழ் இருக்க வேண்டும். சர்வாதிகாரி தான் எப்போதும் விதியை விரும்புவது இல்லை. விதிமுறைகள் தான் பாதை. பாதை இருந்தால் பயணிப்பது, வளர்ச்சி எளிது.


Indian
செப் 22, 2025 12:48

இந்தியா வளர வேண்டும் என்றால் முதலில் மத அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். மாநிலங்களுக்கு இடையில் ஓரவஞ்சனை செய்வதை நிறுத்த வேண்டும். வரி பங்கீட்டை ஒரவஞ்சனையாக வட மாநிலங்களுக்கு அதிகமாக கொடுப்பதை நிறுத்த வேண்டும் . ஹிந்தி மொழியை , ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் திணிப்பதை நிறுத்த வேண்டும் . இல்லை என்றால் சாத்திய மில்லை


ஆரூர் ரங்
செப் 22, 2025 14:14

8000 கோடி ரூபாய் மத்திய அரசு சொத்துக்களை மத்திய அரசு வக்ஃபு வாரியத்துக்கு அளித்தது மத அரசியல். சிறுபான்மையினர் அதிகமுள்ள காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு வருவாயை விட ஐந்து மடங்கு, பத்து மடங்கு நிதியளித்தது மத அரசியல். ஹிந்து ஆலயங்களை மட்டும் அரசே கைப்பற்றி நிதி எடுத்துக் கொள்வது மத அரசியல். குறிப்பிட்ட மதத்தினர் தாங்கள் போட்ட பிச்சையில் அமைந்துள்ள ஆட்சி என்பது மத அரசியல். இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறாமல் புறக்கணிப்பது மத அரசியல். இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டம் நடத்தாமல் எங்கோ உள்ள பாலஸ்தீன பயங்கரவாதி களுக்கு ஆதரவாக மட்டும் போராட்டம் நடத்துவது மத அரசியல்.


Mario
செப் 22, 2025 12:06

அப்போ இந்த 10 வருடம் இந்தியா வளரவில்லையா? அத்தனையும் பொய்யா கோபால்


மோகனசுந்தரம்
செப் 22, 2025 10:33

ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டை எவ்விதம் முன்னேற்றலாம், மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யலாம் என்ற ஒரே சிந்தனையுடன் இருக்கும் உங்கள் செயல்பாட்டை மக்கள் வெகுவாக பாராட்டுவார்கள்.


sivakumar Thappali Krishnamoorthy
செப் 22, 2025 10:10

கொடுக்கிறது கொஞ்சம் கொறஞ்சிருக்கு .அதன் பயன் சாதாரண மக்களுக்கு கிடைக்குமா.. சந்தேகம் தான். ரேட் மாத்த மாட்டாய்ங்க.. எல்லா இடத்திலேயும் மக்கள் பழைய ரேட் தான் வாங்க போறாங்க.... லாபம் விக்கிறவனுக்கும் மற்றும் ஏஜென்ட் கு தான்


Barakat Ali
செப் 22, 2025 10:18

பில்லை பார்க்காம கேட்ட காசை கொடுத்துட்டு வந்துருவீங்களா ????


Indian
செப் 22, 2025 09:58

கனவு காணும் வாழ்கை யாவும் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 22, 2025 09:32

திராவிட மாடல் உங்களுக்கு ஒத்துழைக்குமா >>>>


புதிய வீடியோ