உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு: பயங்கரவாதி உ.பி.,யில் கைது

பாக்., ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு: பயங்கரவாதி உ.பி.,யில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடன் தொடர்புடைய பப்பர் கல்சா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை உ.பி., போலீசார் கைது செய்துள்ளனர்.பிரயாக்ராஜ் மகா கும்பமேளா, திரிவேணி சங்கமத்தில் ஜன- 13 முதல் பிப்-26 வரை தொடர்ந்து 44 நாட்கள் நடைபெற்றது. கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கும்பமேளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., தொடர்புடைய பப்பர் கல்சா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி லாஜர் மாசிஹ் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.கைது குறித்து உத்தரபிரதேச டி.ஜி.பி., பிரசாந்த் குமார் கூறியதாவது:கும்ப மேளாவின் போது, பப்பர் கல்சா பயங்கரவாத அமைப்பின் லாஜர் மாசிஹ் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தான். இவன் சர்வதேச அளவில் தொடர்புகளை கொண்டுள்ள பயங்கரவாதி ஆவான். அவன், இன்று உத்தரபிரதேசத்தின் கெளாம்பி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டான்.சிறப்பு அதிரடிப்படை மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் அதிகாலை 3:20 மணியளவில் லாஜர் மாசிஹ்கை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த கைது, பயங்கரவாதத்தின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் தீய நோக்கத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. பாதுகாப்புப் படைகள் உயர் எச்சரிக்கையில் உள்ளன. மேலும் அவனது நெட்வொர்க் மற்றும் அவன் திட்டங்கள் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.இவ்வாறு பிரசாந்த் குமார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 23:44

கேரளா, தமிழ்நாட்டைப்பத்தி அவனுக்குத் தெரியல .....


S Jahir
மார் 06, 2025 23:05

இவன் தீவிரவாதியா


MARUTHU PANDIAR
மார் 06, 2025 21:18

இப்போ நம்ம ஐயாமார்களான தேசத்தின் பாதுகாப்பும், இறையாண்மையும் மட்டுமே உயிர் மூச்சாக கொண்டு தொழில் நடத்தும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதி மற்றும் அமைதி குடிமக்கள் மும்பை, சிவில் சொசைட்டி டெல்லி, ரிஹாஏ மஞ்ச், இந்தியா அமரிக்க முஸ்லீம் கவுன்சில், லண்டன் தர்க்கசியா சாலிடாரிட்டி குழு, ஜமியத் உலமா சட்டக்குழு போன்ற என் ஜி ஓ க்களின் நிதி உதவி, ஆபர்களையும் லட்சியம் செய்யாத , இனிமேலும் செய்ய வைய்ப்பில்லாத மகா கனம் பொருந்திய, தேசிய சிந்தனையில் ஊறிய பிரசாந்து பூஷன், ராஜிவ் தவான், அஷ்வினி குமார், கொன்சால்வஸ் ஆகியோர் இந்த ஒன்றுமறியாத பப்பாவை காப்பாற்ற ஆஜராகும் பொன்னாள் எதுவோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை