உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் பாதையில் மதுக்கடைகள்: பா.ஜ.,வுக்கு காங்., கண்டனம்

ராமர் பாதையில் மதுக்கடைகள்: பா.ஜ.,வுக்கு காங்., கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி:அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் வழியான ராமர் பாதையில் மதுபானக் கடைகளை திறக்க அனுமதி அளித்த உத்தர பிரதேச அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், வரலாற்று சிறப்புமிக்க பால ராமர் கோவில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதையடுத்து, அயோத்தியை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக அயோத்தி வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் ராமரின் வாழ்க்கை வரலாற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், 13 கிலோமீட்டர் தொலைவுக்கு ராமர் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் அமைந்துள்ள ராம ஜென்மபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமர் பாதையிலேயே மதுக்கடைகள் செயல்படுவதாக, உத்தர பிரதேச காங்., தலைவர் அஜய் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.பணம் சம்பாதிப்பதற்காக அயோத்தியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இது அயோத்திக்கு ஒரு அவமானம் என்றும் கண்டனம் தெரிவித்தார். ராமரின் புனித நகரத்தில் மதுபானக் கடைகளை திறக்க அரசு எப்படி அனுமதித்தது? ராமர் பாதைக்கு அருகிலுள்ள மதுபானக் கடைகளுக்கு எப்போது உரிமங்கள் வழங்கப்பட்டன? இந்தக் கடைகள் அரசு அதிகாரிகளிடமிருந்து எவ்வாறு அனுமதி பெற்றன? உரிமங்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? ஆம் எனில், எப்போது? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் உ.பி., அரசுக்கு அஜய் ராய் எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Sargam
ஜூன் 13, 2025 13:15

ராமர் கோவில் அமைந்துள்ள ராம ஜென்மபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு கட்டாயம் தடை விதிக்கப்படவேண்டும். எங்கே JCB specialist முதல்வர்? அவருக்கு இந்த அவலம் தெரியாதா?


Anantharaman Srinivasan
ஜூன் 13, 2025 11:18

அயோத்தி ராமர் பாதையில் மதுக்கடைகள்: பா.ஜ.,வுக்கு காங்., கண்டனம்... அயோத்தி ஆன்மீக பூமியா.. பிக்னிக் spot டா..? அல்லது இரண்டும் கலந்ததா..?


sribalajitraders
ஜூன் 13, 2025 11:12

தமிழ்நாட்ல செஞ்சாதான் தப்பு மத்தபடி வடநாட்ல சாராயம் விக்கலாம்


Raja k
ஜூன் 13, 2025 09:46

இந்தியாவில் சாராய விற்பனை வருவாயில் முதலிடத்தில் இருப்பது உத்தரபிரதேசம், ஆனால் இங்குள்ள சங்கிகள் தமிழ்நாடுதான் மோசம் என சாமியாட்டம் போடுவார்கள், ராமராஜ்ஜியம் என சொல்லி கொள்ளும் சங்கிகள் ராமர் ஜென்ம பூமியிலேயே அவர் முன்னாடியே சாராயகடை நடத்துகிறார்கள் இதெல்லாம் இங்குள்ள சங்கிகளுக்கும், சங்களுக்கு ஜால்ரா போடுற ஊடகங்களுக்கும் தெரியாது,,


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 13, 2025 11:58

ராமர் கோவில் அமைந்துள்ள ராம ஜென்மபூமியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ராமர் பாதையிலேயே மதுக்கடைகள் செயல்படுவதாக, உத்தர பிரதேச காங்., தலைவர் அஜய் ராய் குற்றம்சாட்டியுள்ளார். இது தான் செய்தி நன்றாக மீண்டும் ஒரு முறை படிக்கவும். சாராயம் உத்திரப் பிரதேசத்தில் விற்றாலும் தவறு தான் தமிழகத்தில் விற்றாலும் தவறு தான். எந்த சங்கியும் உத்திரப் பிரதேசத்தின் சாராயம் நல்லது என்று சொல்ல மாட்டான். சங்கிகள் யாரும் முட்டாள்கள் இல்லை.


sankaranarayanan
ஜூன் 13, 2025 09:44

இங்கே திராவிட மாடல் அரசு பள்ளிகள் அருகில் மருத்துவமனை அருகில் தொழுகைகள் நடத்தும் கோயில்களின் அருகில் மதுக்கடைகள் நடத்த அனுமதி கொடுத்து மக்களை பாழாக்கி வருவது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா அடுத்தவர்கள் செய்தால் அது குற்றம் நீங்களோ அல்லது உங்களது நண்பரோ அதே செயலை செய்தால் அதற்கு வாழ்த்து என்னடா இந்த வினோத மனப்பான்மை


Dharmavaan
ஜூன் 13, 2025 08:46

இது உண்மையா அரசியல் ஸ்டண்டா


Sivakumar
ஜூன் 13, 2025 07:41

அய்யையோ காங்கிரஸ், இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி. இப்படி எல்லாம் பண்ணினா எப்படி உங்கள இந்து மத விரோதினு துர்ப்பிரச்சாரம் பண்ண முடியும்?


Ganesun Iyer
ஜூன் 13, 2025 06:46

சரியான கேள்வி..ஆனா அதே கேள்விய திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இங்கே ஏன் கேக்கல?


J.Isaac
ஜூன் 13, 2025 09:22

அண்ணாமலையிடமும் கேட்க வேண்டும்


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 13, 2025 06:11

எங்கே அண்ணாமலை இங்கு சாராயக்கடை மூடனும் என்று சொல்லும் இவர் அங்கு சென்று போராட்டம் நடத்துவாரா


vivek
ஜூன் 13, 2025 09:24

திராவிட சதி இருக்கும்....நல்ல விசாரி துருவேஷ்


Priyan Vadanad
ஜூன் 13, 2025 05:58

முகமூடியணிந்தவர்களிடம் கேட்கும் கேள்வியா இது?


சமீபத்திய செய்தி