உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அ.தி.மு.க., கூட்டணியின் வெளியே தெரியாத ரகசியம் ! ராஜ்யசபாவில் பெரும் பலம் பெற பா.ஜ., வியூகம்

அ.தி.மு.க., கூட்டணியின் வெளியே தெரியாத ரகசியம் ! ராஜ்யசபாவில் பெரும் பலம் பெற பா.ஜ., வியூகம்

புதுடில்லி : அதிமுகவுடன் பா.ஜ., கூட்டணி அமைத்திருப்பது பல விமர்சனங்களை தந்தாலும் பார்லி.,யில் ராஜ்யசபா (மாநிலங்களவை ) எம்.பி.,க்கள் பலம் பெற்று 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பா.ஜ., தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி பலம் பெறும் உகந்த சூழல் உருவாகி உள்ளது.

பெரும்பான்மை எவ்வளவு ?

மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி பல்வேறு மாநிலங்களில் அரசியல் ஸ்திர நிலையை பலப்படுத்தி வருகிறது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு மசோதாவும் ராஜ்யசபாவில் வந்து தான் சட்டமாக உருமாற முடியும். இதற்கு இந்த சபையில் பெரும்பான்மை எம்பி.,க்கள் அவசியமாகிறது. தற்போது உள்ள ராஜ்யசபாவில் 245 எண்ணிக்கையில் 9 இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி தற்போது உள்ள 236 ல் பெரும்பான்மைக்கு 119 தேவை. இதில் பாஜ., கட்சி எம்பி.,க்கள் மட்டும் 98 பேர். இதன் பலத்தை இன்னும் அதிகரிக்க பா.ஜ., மேலிடம் முயற்சிக்கிறது. இதன் ஒரு முயற்சியாக அதிமுக கூட்டணியின் விளைவு, அதாவது மாநிலத்தில் சட்டசபையில் இடம் பெறுவதுடன், ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பெருக்கி கொள்ள முடியும் என பா.ஜ., திட்டமிட்டு காய் நகர்த்துகிறது.

அதிமுக இணைவதால்

இப்போது அதிமுக பா.ஜ.,வில் இணைந்த பிறகு, ராஜ்யசபாவின் எண்ணிக்கையும் மாறும். அதிமுக வருகையால் 119 என்ற தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் 123 ஆகிறது. ராஜ்யசபாவில் அதிமுகவுக்கு தம்பிதுரை, சிவி சண்முகம், தர்மர், சந்திரசேகர் என நான்கு உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இந்த உறுப்பினர் பதவி தமிழக சட்டசபையின் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், அதிமுக இந்த இடத்தையும் பெறும். இது ராஜ்யசபாவில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிக்கும். தே.ஜ., கூட்டணி எண்ணிக்கை 124 ஆக உயரக்கூடும்.

ஆந்திரா- காஷ்மீர் நிலை

ஆந்திராவில் ஒரு ராஜ்யசபா இடம் காலியாக உள்ளது, இது முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது. இதேபோல், நியமன எம்.பி.க்களுக்கான நான்கு இடங்கள் காலியாக உள்ளன, இதுவும் பாஜ.,வுக்கு சாதகமாகவே இருப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.ஜம்மு காஷ்மீரில் நான்கு உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளன. தேர்தல் நடைபெறும் போது, ​​90 எம்எல்ஏ.,க்களைக் கொண்ட சபையில் 29 எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜ குறைந்தது ஒரு இடத்தையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 இடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

இலக்கு 140

ஆக மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 140 உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை கட்சியாக திகழும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 2014க்குப்பிறகு அதிக பெரும்பான்மை கொண்ட கட்சியாக ராஜ்யசபாவில் திகழும். தற்போது காங்., தலைமையிலான இண்டி கூட்டணியில் 88 ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் 27, திரிணாமுல் காங்கிரஸ் 13, ஆம்ஆத்மி, திமுக தலா 10.

வக்பு மசோதா- ஒரேநாடு ஒரே தேர்தல்

ஏற்கனவே வக்பு சட்ட மசோதா நிறைவேற்ற பெரும்பாடு பட வேண்டியிருந்தது. நள்ளிரவு முதல் விடிய, விடிய விவாதம் நடந்தது. இதில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க., எதிராக ஓட்டளித்துள்ளன. பா.ம.க, வெளிநடப்பு செய்தது. 128 பேர் ஆதரவுடன் வக்ப் மசோதா நிறைவேறியது. இது போல் ஒரே நாடு , ஒரே தேர்தல் விரைவில் சட்டம் வரவுள்ளது. இதற்குள் தே.ஜ., கூட்டணி ராஜ்யசபாவில் பெரும் பலம் பெறும் என்று பா.ஜ., மூத்த தலைவர்கள் நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பெரிய குத்தூசி
ஏப் 13, 2025 17:33

அப்படியே 115 கோடி இந்து மக்கள் வாழும் பாரதநாட்டில் இந்து மதத்தையும், இந்து கடவுளர் அவதூறாக பேசி அவமான செய்பவர்களை ஜாமினில் வரமுடியாத, ஆயுள் தண்டனை பெரும் சட்ட திருத்தத்தை காங்கிரஸ் கொண்டுவந்த மத சார்பற்ற சட்டத்தில் திருத்தும் செய்து சட்டமாக நிறை வேற்றுங்கள்


Rajarajan
ஏப் 13, 2025 15:22

பா.ஜ.க. கட்சி நல்லதோ இல்லையோ, அரசியல் என்றால் அவியலா செய்வார்கள் ? ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். பழைய இந்தியாவாக சட்டங்கள் இருந்தால், ஹிந்துக்கள் பெரும்பான்மை இழப்பர். ஹிந்துக்களுக்கு பாதுகாப்பும், எதிர்கால அடிப்படை வாழும் நிலையும், நிம்மதியும் எதிர்கால சந்ததிக்கு தேவையெனில், சில அடிப்படை அமைப்புகளை மாற்றியே தீரவேண்டும். பத்தாம் பசாலிகளுக்கு, எதிர்காலம் பற்றி தெரியாது. தாங்கள் பரம்பரை தி.மு.க. என்று பேசும் அடிமுட்டாள்களால் தமிழகம் நிலைமை இன்னும் மோசமாகும். அப்படிதான், பரம்பரை காங்கிரெஸ்க்காரன் என பேசும் அடிமுட்டாள்களால் நாடு மோசமானது போதாதா ?? மாற்றம் தேவை. மாற்றமொன்றே மாறாதது.


Tirunelveliகாரன்
ஏப் 13, 2025 14:25

ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா எவனும் நல்ல இருக்க கூடாது. பொது சிவில் சட்டம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 13, 2025 13:27

ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், முத்தலாக் தடை சட்டம், சட்டப்பிரிவு 370 நீக்கம் போன்றவை தேர்தல் வாக்குறுதியாக தரப்பட்டு, மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்ற அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எடுக்கும் அரசியல் முடிவுகளை தவறு என்று சொல்ல முடியாது. பிஜேபியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.


J.Isaac
ஏப் 13, 2025 18:00

இதனால் தள்ளு வண்டியிலும், பிளாட்பார்மிலும், ரோட்டு ஓரத்திலும் பஸ் ஸ்டான்டிலும் கடலை வியாபாரம் செய்யும் இந்துக்களின் வாழ்க்கைத்தரம், துப்புரவு தொழில், சலவைத்தொழில், முடித்திருத்தம் தொழில், ஒர்க் ஷாப் வைத்திருக்கும், ஆட்டோ, டாக்சி ஓட்டும் இந்துக்களின் வாழ்க்கை தரம் உயருமா ?


தத்வமசி
ஏப் 13, 2025 13:06

சாணக்கியர் எப்படி என்பது நாடே அறியும்.


Barakat Ali
ஏப் 13, 2025 12:38

மத்தியில் எந்த கட்சி / கூட்டணி ஆட்சி செய்தாலும் அது மசோதாக்களை பிரச்னை இன்றி நிறைவேற்றிக்கொள்ள ராஜ்யசபாவிலும் தனது பலத்தை அதிகரித்துக்கொள்ளவே விரும்பும் .... இதில் தவறில்லை ... இயல்பானது .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 13, 2025 13:36

நல்லவேளை ......


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 13, 2025 12:32

எலெக்ஷன் 2 மாசம் முன்னாடி எடப்பாடி பிஜேபிக்கு காம்பு காமிப்பாரு, எல்லாம் விடியல் செயல்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 13, 2025 12:31

NDA UPA வித்தியாசம், இவனுங்க அதிகார பசி அவனுங்களுக்கு எல்லாத்தையும் சுருட்டற பசி, ரெண்டு கட்சியும் ஒன்னு தான், ஊழல் ஒழிப்புன்னு வாய் கிழிய பேசுவானுங்க கூட்டணி வெச்சிப்பானுங்க, மோடிக்கு தமிழ் நாட்டில் 0.002% ஓட்டு கூட இல்லை, 8% ஓட்டு நடுநிலை மற்றும் அண்ணாமலையால் மட்டுமே


பேசும் தமிழன்
ஏப் 13, 2025 12:15

ஒரே நாடு ஒரே தேர்தல் பிறகு பார்த்துக் கொள்ளலாம்... முதலில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்.... அது தான் இப்போது அவசியமான ஒன்று.... காலத்தின் கட்டாயம்.....ஆளுக்கு ஒரு நீதி.... ஆளுக்கு ஒரு சட்டம் என்று இருக்க கூடாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 13, 2025 11:48

அதிமுக என்பது திமுகவின் பிரதி பிம்பம் என்னும் உண்மை சாணக்கியருக்கே தெரியாது போல .....


Svs Yaadum oore
ஏப் 13, 2025 12:56

கூட்டணிக்கு சில நாட்கள்தான் முன்புதான் ராஜ்ய சபாவில் டயர்கள் வக்பு சட்ட மசோதாவுக்கு எதிராகத்தான் வோட்டு போட்டார்கள் .....


சமீபத்திய செய்தி