உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பணத்தில் அமைச்சர்களின் மருத்துவச் செலவு பட்டியல்; முதல்வர் தான் டாப்!!

அரசு பணத்தில் அமைச்சர்களின் மருத்துவச் செலவு பட்டியல்; முதல்வர் தான் டாப்!!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: அமைச்சர்களின் மருத்துவ செலவு பட்டியல் வெளியான நிலையில, முதல்வர் பினராயி விஜயனுக்கு தான், கேரள அரசு அதிகம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது.இவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் செய்த மருத்துவச் செலவு குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.அதாவது, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி முதல் 2024ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி வரையில் ஒட்டுமொத்தமாக ரூ.1.73 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.யாருக்கும் எந்த சிறப்பு இன்சூரன்ஸூம் போடவில்லை என்றும், செய்யப்பட்டுள்ள அனைத்து மருத்துவ செலவுகளுக்கான பணமும் நிதித்துறையில் இருந்தே செலுத்தப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக முதல்வர் பினராயி விஜயனுக்கு ரூ.77 லட்சத்து 74 ஆயிரத்து 356 செலவிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷனுக்கு ரூ.1,42,123ம், முன்னாள் அமைச்சர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தனுக்கு ரூ.2,22,256 செலவிடப்பட்டுள்ளது.அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் மருத்துவ செலவு விபரம்கே கிருஷ்ணன்குட்டி - ரூ.32,42,742வி.சிவன்குட்டி - ரூ.18,95,758ஏ.கே. சசீந்திரன் - ரூ.5,94,458அந்தோணி ராஜூ (முன்னாள் அமைச்சர்) - ரூ.6,41,071ஆர்.பிந்து - ரூ.4,28,166அஹமது தேவர்கோவில் (முன்னாள் அமைச்சர்) - ரூ.4,20,561வி.என்.வாசவன் - ரூ.3,46,929கடனப்பள்ளி ராமச்சந்திரன் - ரூ.3,15,637எம்.பி. ராஜேஷ் - ரூ.3,39,179வி.அப்துல் ரஹிம் - ரூ.2,87,920கே.என்.பாலாகோபால் - ரூ.2,05,950கே.ராஜன் - ரூ.1,71,671ஜி.ஆர்.அனில் - ரூ.1,22,000கே.ராதாகிருஷ்ணன் - ரூ.99,219ஜே.சிஞ்சுராணி - ரூ.86,207சஜி செரியன் ரூ.25,424முகமது ரியாஸ் - ரூ.18,135என். ஜெயராஜ் ( தலைமை கொறடா) - ரூ.16,100


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
நவ 27, 2024 20:33

கம்யூனிஸ்டுகளின் இந்த லீலைகள் வெளியே வர ஆரபித்து விட்டன . கேரள மக்கள் திருந்த வேண்டும்.


Barakat Ali
நவ 27, 2024 19:48

ஏழைப் பங்காளன் .........


Ramesh Sargam
நவ 27, 2024 19:47

அடிக்கடி உடம்பு சரியில்லாத அரசு பணியாளர்களை அரசு பணியிலிருந்து நீக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சட்டமும் அப்படித்தான் கூறுகிறது. அப்படி இருக்கையில் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும் முதலமைச்சர், மற்றும் பல அமைச்சர்களை பணியிலிருந்து நீக்கவேண்டும். ஆரோக்கியமானவர்களை பதவியில் அமர்த்தவேண்டும்.


Rajan
நவ 27, 2024 19:26

அயாராது பணியாற்றுபவர்கள்


Sivagiri
நவ 27, 2024 19:18

:..பூ , ஜுஜுபி , இங்க , தமிழ்நாடு அரசு ஏதாவது கணக்கு காண்பிக்குமா ? . . , கணக்கு இருக்கா ? , ,


KRISHNAN R
நவ 27, 2024 18:46

நாட்டு பற்று


சமீபத்திய செய்தி