உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்

பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க விரும்பும் ப.சிதம்பரம்: லோக்சபாவில் அமித் ஷா ஆவேசம்

புதுடில்லி: ''பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க ப.சிதம்பரம் விரும்புகிறார்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து லோக்சபாவில் அமித்ஷா பேசியதாவது: ஆபரேஷன் மகாதேவில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தான் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4drlj8pb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்த உடனே நான் ஸ்ரீநகருக்கு சென்றேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். முக்கிய குற்றவாளி சுலைமான் கொல்லப்பட்டான். பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிடாமல் தடுத்தோம். அப்பாவி மக்களை கொன்ற 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு எம்.9 ரக துப்பாக்கி, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

யோசிக்க முடியாத...

ஆபரேஷன் சிந்தூர் போலவே, ஆபரேஷன் மகாதேவும் முழு வெற்றி அடைந்தது. ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 3பேர் கொல்லப்பட்டது உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு எதிராக யோசிக்க முடியாத அளவில் தாக்குதல் நடத்தி உள்ளோம். திருமணமான 6 நாட்களில் கணவனை இழந்த பெண்ணின் வலியை நான் நேரில் உணர்ந்தேன்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, 3 ஆயிரம் மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. நீங்கள் பாகிஸ்தான் உடன் பேசி கொண்டு இருக்கிறீர்களா? பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதால் எதிர்க்கட்சியினர் சந்தோஷம் அடைவார்கள் என நினைத்தேன்.

நற்சான்றிதழ்

மாறாக அவர்கள் அனைவரும் சோகம் அடைந்துள்ளனர். மக்களை காக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு தான். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் யாரை காப்பாற்ற முயற்சிக்கிறார். அவர் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என கேட்கிறார். அவர் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்க விரும்புகிறார்.ஆனால் உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம்.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் தெளிவாக விளக்கிவிட்டார். 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ., பயணித்து அவர்கள் நிலத்திலேயே பயங்கரவாதிகளை அழித்தோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது தான்.

காங்கிரசால்....!

மோடி அரசு மன்மோகன் அரசைப் போல் வேடிக்கை பார்க்காது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சியால் அழிக்க முடியாத பயங்கரவாதிகளை நாங்கள் அழித்தோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஊக்கம் தருகிறது என்பதை உலகிற்கு அம்பலப்படுத்தி உள்ளோம். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படை கூட்டத்தில் பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

பாக்., கெஞ்சியதால்...!

இப்பொழுது நடப்பது மோடி ஆட்சி; மன்மோகன் ஆட்சி அல்ல. பாகிஸ்தானில் அனைத்து பயங்கரவாதிகள் முகாம்களையும் அழித்துவிட்டோம். பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில், போரை நிறுத்த இந்தியா தான் முடிவு செய்தது. நேருவின் போர் நிறுத்தத்தால் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது. சிம்லா ஒப்பந்தத்தில் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பெற்று இருந்தால் பிரச்னை வந்திருக்காது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

K.n. Dhasarathan
ஜூலை 29, 2025 21:29

உள்துறை கோட்டை விட்டு விட்டது ஆமிட் ஷா சப்பை கட்டு காட்டுகிறார், எந்த போலீசும் அங்கு இல்லை, எத்தனை பேர் வந்தார்கள், தெரியாது, எப்படி வந்தார்கள் தெரியாது, எப்போது பிடிப்பீர்கள் தெரியாது ?ஆஹா செத்துட்டான் இல்ல, அவன்தான், இன்னும் பிடிபடாதவன் உண்டா, தெரியாது ? பிரதமர் அங்கு வந்தாரா தெரியாது? இனி மறுபடி நடக்குமா தெரியாது ? ராணுவ நடவடிக்கைக்கு நீங்கள் ஏனய்யா மார் தட்டுகிறீர்கள், தெரியாது காஸ்மீரில் அமைதி திரும்புமா தெரியாது ? ஆவேசம் எதற்கு ?தெரியாது


Suppan
ஜூலை 30, 2025 16:07

சபாசு. கான்கிராஸ் உறுப்பினர், காரியக்கமிட்டி உறுப்பினர் பதவி பார்சேல் . பசி தன கைகளால் நேரில் கொடுப்பார்.


Tamilan
ஜூலை 29, 2025 21:23

சிதம்பரம் ஜீ நாட்டின் சொக்க தங்கம். அடுத்தநாட்டின் மீது வீண் வம்பு வளப்பது நாட்டுக்கு அழகல்ல, நல்லதல்ல


c.mohanraj raj
ஜூலை 29, 2025 20:59

இன்னும் பா சிதம்பரம் ஜாமினில் தான் உள்ளார் உடல் நலம் முடியவில்லை அது இது என்று சொல்லியிருக்கிறார் தூக்கி உள்ளே வைக்கவும்


V RAMASWAMY
ஜூலை 29, 2025 19:01

இன்னுமா அசிங்கப்படணும், கான் கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு உங்களுக்கு விரும்பும் அந்த நாட்டிற்கே சென்று வாசிக்கலாம், எப்படி யோசனை?


spr
ஜூலை 29, 2025 18:59

அறிஞர் சிதம்பரம் சொன்ன இந்தக் கருத்துதான் பிரச்சினையை திசை திருப்புகிறது "பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள், பாகிஸ்தானில் இருந்து தான் வந்தனர் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அவர்கள், உள்நாட்டு பயங்கரவாதிகளாகக் கூட இருக்கலாம்,” இது உண்மையா என்பது தெரியாது என்றாலும், இருந்தாலும், கொஞ்சம் நாசூக்காகக் கேட்டிருக்கலாம் இப்படி பல துறைகளில் பொறுப்பு வகித்த ஒரு முன்னாள் அமைச்சர், தனிப்பட்ட முறையில் ஊழல்வாதியாக இருந்தாலும், இன்னமும் நிரூபிக்கப்படாமல் இருப்பவர் என்றாலும் வெளிப்படையாகக் கேட்டது பாகிஸ்தானின் வாதத்திற்கு வலு சேர்க்காதா? பொறுப்புள்ள தலைவராக இருந்தால் சிந்திக்க மாட்டாரா? அதற்காகக் கண்டிக்கலாம்


அப்பாவி
ஜூலை 29, 2025 18:33

ஏன் ஆக்கிரமிப்பு காஷ்மீரிட நிறுத்திறீங்க. அகண்ட பாரத்னு பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் சேத்துர வேண்டியதுதானே? நமக்கு துரோகம் சென்ஹ்சவங்க, நம்னகை கொக்கையடிச்சிட்டு போனவங்க பிரிட்டிஷ்காரங்க. அவிங்களோட தடையில்லா ஒப்பந்தம் போடுறோம்.


Rajan A
ஜூலை 29, 2025 18:03

இயந்திரத்தையே ஒரு பானை பிரியாணிக்காக இனாம் அளித்தவர் நம்ம பானா சீனா


Rajan A
ஜூலை 29, 2025 18:01

நோட்டு அடிக்கும் இயந்திரத்தையே ஒரு பானை பிரியாணிக்காக இனாம் அளித்தவர் பானாசீனா. அதிலயையும் பா - பாக், சீனாவும் வருகிறா மாதிரி இருக்கோ?


C.SRIRAM
ஜூலை 29, 2025 18:00

சிவகங்கை .... தலைவர் மீதான வழக்கு தாமதம் ஏன் ?. மாஜி அமைச்சர் கிரிமினல் பேர்வழி .


முருகன்
ஜூலை 29, 2025 17:16

கெஞ்சிய தால் போரை நிறுத்தி விட்டோம் என்ன ஒரு கண்டுபிடிப்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை