உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயல் நீதிமன்றத்தில் டிச.,14ல் லோக் அதாலத்

தங்கவயல் நீதிமன்றத்தில் டிச.,14ல் லோக் அதாலத்

தங்கவயல்: ''தங்கவயல் நீதிமன்றத்தில், டிசம்பர் 14ம் தேதி தேசிய லோக் அதாலத் நடக்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணப்படும்,'' என்று முதன்மை நீதிபதி முசாபர் ஏ.மஞ்சரி தெரிவித்தார்.தங்கவயல் நீதிமன்றத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:தங்கவயல் நீதிமன்றத்தில் 2,500க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவைகளில் சமரச முறையில் தீர்வு காண, தேசிய லோக் அதாலத், டிசம்பர் 14 ல் நடக்கிறது.சிவில் வழக்குகளான வரதட்சணை, விவாகரத்து, வங்கிகளில் பணத்தகராறு, மோட்டார் வாகன விபத்து தகராறுகள், குடிநீர், மின் கட்டண குளறுபடி ஆகிய வழக்குகளில் இரு தரப்பினரும் சமரச முறையில் தீர்வு காணலாம்.இரு தரப்பினரும் வக்கீல்கள் மூலம் பேசி தீர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழக்கில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. இவ்வாறு அவர் கூறினார்.நீதிபதிகள் ரஹீம் அலி மவுலானா, வினோத்குமார், மஞ்சு, வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் கவுடா, துணைத் தலைவர் மணிவண்ணன், பொதுச் செயலர் நாகராஜ், மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை