உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா வேட்பாளர் தேர்வு: காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனை

லோக்சபா வேட்பாளர் தேர்வு: காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனை

பெங்களூரு: லோக்சபா தேர்தல் குறித்து நேற்று அமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் குழு முதல் ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.லோக்சபா தேர்தலுக்காக, காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் குழு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இந்த பட்டியலில், துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் சித்தராமையா, மூத்த தலைவர்கள் முனியப்பா, வீரப்ப மொய்லி, ஹரிபிரசாத், தேஷ்பாண்டே, ராமலிங்கரெட்டி உட்பட மொத்தம் 58 பேர் இடம்பெற்றுஉள்ளனர்.முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி, மேலிட பொறுப்பாளரான தமிழகத்தின் கோவையை சேர்ந்த மயூரா ஜெயகுமார் உட்பட வெவ்வேறு பிரிவு முக்கியஸ்தர்களை சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுடன், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, நேற்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்.கர்நாடகாவின் 28 லோக்சபா தொகுதிகளின் வேட்பாளர்கள் விபரம், பொது கூட்டங்கள், மாநாடு, கட்சி நிகழ்ச்சிகள், அரசு திட்டங்கள் குறித்து இரவு வரை ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு தலைவரின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளன.இறுதியில், இந்த மாத இறுதிக்குள் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை, கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கும்படி, மேலிட பொறுப்பாளர் அறிவுறுத்தினார். கூட்டத்துக்கு பின், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:கர்நாடகாவில் மத்திய மேற்பார்வை குழுவுக்கு வேட்பாளர்கள் சிபாரிசு செய்யப்படும்.அவர்கள் பரிசீலனை செய்து, மத்திய தேர்தல் கமிட்டிக்கு அனுப்பி வைப்பர்.அவர்கள் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பார்கள். வேட்பாளர் தேர்வில் எதையும் மறைக்க முடியாது.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை