உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் பெரும்பான்மையுடன் தே.ஜ.,கூட்டணி ஆட்சி: ராஜ்நாத் சிங் உறுதி

மீண்டும் பெரும்பான்மையுடன் தே.ஜ.,கூட்டணி ஆட்சி: ராஜ்நாத் சிங் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: 'வரும் லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அசாம் மாநிலம் கோகராஜார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, அவர்களது அமைச்சர்கள் மேல் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பா,ஜ., ஆட்சியில் ஒரு அமைச்சர் மீது கூட குற்றம் சாட்டப்படவில்லை. எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. வரும் லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். நாம் அனைவரும் அரசியல் செய்பவர்கள். ஆனால் நாங்கள் ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்யவில்லை. நாட்டையும் சமுதாயத்தையும் காப்பதற்காக அரசியல் செய்கிறோம். இதுதான் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் பா.ஜ.,வுக்கும் உள்ள வித்தியாசம். பாஜவின் அரசியல் சாதனை பாராட்டுக்குரியது. பா.ஜ., பொதுமக்களை கடவுளாக பார்க்கிறது. ஆனால் காங்கிரஸ் ஒரு குடும்பத்தை கடவுளாக நினைக்கிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ