உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதிகளை விசாரிக்கும் லோக்பால் உத்தரவுக்கு தடை

நீதிபதிகளை விசாரிக்கும் லோக்பால் உத்தரவுக்கு தடை

புதுடில்லி :உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு உள்ளது என்ற, லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q95zecad&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பு, சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தது. இரண்டு வெவ்வேறு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது, ஊழல் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அதை விசாரித்த லோக்பால் அமைப்பு, 'லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொது சேவகர்கள் என்ற பிரிவில் வருகின்றனர்.'மேலும், அந்த சட்டங்களில் நீதிபதிகளுக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அதனால், லோக்பால் சட்டத்தின்கீழ், உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்த ஊழல் புகார்களை லோக்பால் விசாரிக்க முடியும்' என, ஜன., 27ல் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தையும் லோக்பால் கேட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்யகாந்த், அபய் ஓகா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, “லோக்பால் அமைப்புக்கு இந்த அதிகாரம் கிடையாது,” என, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.இதைத் தொடர்ந்து, லோக்பால் அமைப்பின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு இடைக்கால தடை விதித்தது. மேலும், இதுகுறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், லோக்பால் பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை, மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
பிப் 21, 2025 16:57

யாரைக் காப்பாத்தணுமோ கோவாலு.


GMM
பிப் 21, 2025 13:25

ஊழல் புகார் இருந்தாலும் சாசன உயர் நீதிமன்றம் நீதிபதியை , தலைமை செயலரை, மாநில தேர்தல் ஆணையரை, தணிக்கை துறை தலைவரை மாநில அளவில், கவர்னர் அனுமதி இல்லாமல் விசாரிக்க முடியாது. கூடாது. லோக்பால் மீது ஊழல் புகார் வந்தால் யார் விசாரிக்க அதிகாரம் உள்ளது. ?


Rajasekar Jayaraman
பிப் 21, 2025 12:14

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எல்லோருமே உத்தம புத்திரர்கள் அதனால் தான் தமிழக அமைச்சர்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.


Anbuselvan
பிப் 21, 2025 09:16

நீதிக்கு அப்பாற் பட்டவர்களோ இவர்கள்? ஜனாதிபதிக்கே நீதிகள் பொருந்தும் பொது இவர்கள் எப்படி விதி விளக்காக அறிவிக்க படுவர். நடப்பு நடைமுறையான பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் IMPEACHMENT நடவடிக்கை அவ்வுளவாக பொருந்தாத காரணத்தால் லோக்பால் அமைப்பு விசாரிக்கலாம் என தாஅன்றுகிறது.


Kasimani Baskaran
பிப் 21, 2025 07:12

கொலீஜியத்துக்கு மேல் யாரும் கிடையாது. அதனால்தான் காங்கிரஸ் கொலீஜியத்துக்குள் நாலு காங்கிரஸ் நீதிபதிகளை புகுத்தி புரட்டு செய்துள்ளது.


Iniyan
பிப் 21, 2025 06:26

இந்த நீதி மன்றங்கள் தங்கள் இஷ்டம் போல ஆட்டம் போடுகிறார்கள். அவர்கள் பொது சேவகர்கள் மற்றும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கும் ஜனாதிபதிக்கும் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்


D.Ambujavalli
பிப் 21, 2025 06:07

அப்படியென்றால் நீதிபதிகள் எந்த நடவடிக்கைபற்றியும் கவலையில்லாமல் ஊழலில் ஈடுபடலாமா? கட்சிகள் விலை கொடுத்து நீதியை வாங்குவதற்கு இது உற்சாகம் அளிப்பதாக இருக்குமே


S. Neelakanta Pillai
பிப் 21, 2025 05:40

லோக்பால் சட்டத்தை ஒட்டி உருவாக்கிய தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் தண்டிப்பதற்கான அதிகாரத்தை தந்திரமாக வழங்கவில்லை. இவரை அவர்கள் விசாரணை செய்த மக்கள் பிரதிநிதிகள் அமைச்சர்கள் முதலமைச்சர் பற்றிய ஏதாவது அறிக்கை வெளி வந்திருக்கிறதா இல்லை மக்கள் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் தன்னை மூத்த பத்திரிகையாளர் என்று காட்டிக் கொள்ளும் என் ராம் போன்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். நல்ல நோக்கத்திற்காக கொண்டுவரப்படும் சட்டங்களை இவர்களை முடக்கி வைத்துவிட்டு நாட்டில் ஊழல் குறைய வேண்டும் லஞ்சம் குறைய வேண்டும் என்று பேசுவதில்லை என்ன நியாயம் இருக்கிறது. பல நேரங்களில் உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக தவறுகளை செய்கிறது பூனைக்கு யார் மணி கட்டுவது


Laddoo
பிப் 21, 2025 05:36

நாங்க எல்லாருக்கும் மேல.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 21, 2025 00:38

நமக்குன்னு வந்தா ரத்தம் கோவாலு.