உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்

பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் தேர்தலின் முதல்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளில் இன்று (நவ.,06) காலை 7 மணிக்கு முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. 121 தொகுதிகளில் பல்வேறு கட்சிகளை சார்ந்த 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த சூழலில், பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.இது குறித்து சமூகவலைதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜனநாயக திருவிழாவிற்கு பீஹார் தயாராக உள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். வாக்காளர்கள் வாக்குச்சாவடியில் வரவேற்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நல்லாட்சியைப் பேண ஓட்டளியுங்கள்!

இது குறித்து சமூக வலைதளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பீஹார் வாக்காளர்கள், எனது சகோதர சகோதரிகள், குறிப்பாக இளைஞர்கள், இன்றைய முதல் கட்ட ஓட்டுப்பதிவில் அதிக எண்ணிக்கையில் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.உங்கள் ஒவ்வொரு ஓட்டும் பீஹாரில் காட்டாட்சி ராஜ்ஜியம் மீண்டும் வருவதைத் தடுக்கவும், நல்லாட்சியைப் பேணவும், வளர்ந்த, தன்னிறைவு பெற்ற பீஹாரை உருவாக்கவும் வழி வகுக்கும். ஊடுருவல்காரர்கள் மற்றும் நக்சலைட்டுகளைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்பவர்களுக்கு இந்தத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்.உங்கள் ஓட்டு, மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் நவீன கல்வி, ஏழைகளின் நலன் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும், பீஹாரின் பெருமையை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பிரேம்ஜி
நவ 06, 2025 12:50

நாங்கள் ஓட்டுப் போடும் கடமையை ஒழுங்காகத்தான் செய்கிறோம்.


babu
நவ 06, 2025 09:59

ஒட்டு போட்டாச்சா...


ஈசன்
நவ 06, 2025 09:30

பீஹார் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இந்துக்களை தவிர மற்ற மதத்தினர் அனைவரும் ஜனநாயக கடமையை ஒவ்வொரு தேர்தலிலும் கிட்டதட்ட தொண்ணூறு சதவீதம் நிறைவேற்றுகிறார்கள். தேர்தல் ஆணையம் அறிவுரை இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும்.


புதிய வீடியோ