உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பள்ளத்தில் கவிழ்ந்த லாரி உயிர் தப்பிய ஓட்டுனர்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி உயிர் தப்பிய ஓட்டுனர்

சிக்கமகளூரு: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, 1,000 அடி பாதாளத்தில் விழுந்தது. ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.சிக்கமகளூரின், மூடிகெரேவில் இருந்து, சார்மாடிகாட்டுக்கு நேற்று அதிகாலை டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. பனிமூட்டமாக இருந்ததால், பாதை சரியாக தெரியவில்லை.சார்மாடிகாட்டின், வியூ பாயின்ட் அருகில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர தடுப்பு சுவர் மீது மோதி, பாதாளத்தில் உருண்டது. இதில் லாரி முழுதுமாக நொறுங்கியது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், கயிற்றின் உதவியால், பாதாளத்தில் இறங்கி ஓட்டுனரை மீட்டனர். அவரது இடுப்பில் பலத்த அடிபட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இவ்வளவு அடி உயரத்தில் இருந்து, கீழே விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள், வனத்துறையினர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி