உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் மக்கள் நம்பிக்கை இழப்பு: ஜனாதிபதி தலையிட கார்கே வலியுறுத்தல்

மணிப்பூர் மக்கள் நம்பிக்கை இழப்பு: ஜனாதிபதி தலையிட கார்கே வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: '' மணிப்பூரில் அமைதியை கொண்டு வர உடனடியாக ஜனாதிபதி தலையிட வேண்டும்,'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் ஜனாதிபதி திரவுமதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 18 மாதங்களாக மணிப்பூரில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மக்களின் சோகம் தொடர்ந்து கொண்டு வந்துள்ளது.மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்பு நிலையை கொண்டு வருவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்துள்ளன. அரசுகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.ஒவ்வொரு நாளும், சொந்த மண்ணிலேயே மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். எந்த உதவியும் கிடைக்காமல் 540 நாட்களாக உதவியற்றவர்களாகவும், தனிமையில் இருப்பதை போலவும் உணர்கின்றனர்.தங்களின் உயிரையும், உடைமைகளையும் இழந்த மக்கள், பிரதமர் மற்றும் மாநில முதல்வர் மீது நம்பிக்கையையும் இழந்துவிட்டனர்.2023ம் ஆண்டுக்கு பிறகு பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. மாறாக எதிர்க்கட்சி தலைவர் 3 முறை சென்றுள்ளார். நானும் சென்றுள்ளேன். அம்மாநிலத்திற்கு பிரதமர் செல்ல மறுப்பதற்கான காரணம் குறித்து தெரியவில்லை.நாட்டின் , ஜனாதிபதி என்ற முறையிலும், அரசியல்சாசனத்தின் பாதுகாவலர் என்ற வகையிலும், மணிப்பூர் மக்களின் வாழ்க்கை மற்றும் உடைமைகளை பாதுகாப்பதற்காக, இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும். இதன் மூலம், மணிப்பூர் மக்கள் அமைதியாக வாழ முடிவதுடன், அவர்கள் வீடுகளின் பாதுகாப்பாகவும், கவுரவமாகவும் வாழ முடியும். இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

sankar
நவ 20, 2024 14:34

அங்கே உள்ள பிரச்சினை புரிந்தும் புரியாதது போல தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் இவனெல்லாம் மனுசனா


M Ramachandran
நவ 20, 2024 10:44

இப்போர் ள்ள காங்கிரஸின் தலமை இட்டலின் குடும்பத்தின் கூண்டு கிளி சொல்வதை சொல்லுமாம் கிளி பிள்ளை.


Sivagiri
நவ 19, 2024 22:59

அய்யா சாமி , நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஊடுருவிய ஆக்கிரமிப்பு மக்கள்தான் , காங்கிரஸ்காரன் முதலைக்கண்ணீர் வடிப்பதெல்லாம் கன்வெர்ட்டிஸ்டுகளுக்காகவும் , ஜிஹாதிகளுக்காகவும் , அர்பன் நக்ஸல்களுக்காகவும் , தான் என்பது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு . . .


Rpalnivelu
நவ 19, 2024 22:25

ஏம்பா கார்கே நீ என்னதான் காசுக்காக/ பதவிக்காக கூவினாலும் ஒனக்கு சீதாராம் கேசரி டிரீட்மென்ட் தான். அடக்கி வாசி இல்லனா ஹைவேயிலேயே இறக்கி உட்ரூவானுங்கோ படுபாவிங்க


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 21:37

Still bjp doesnt talk about Manipur. Its blind followers pinky their mouths and blame congress, Rahul gandhi and others. Do the Manipur people are slaves of congress? They act as congress say? Then why congress didnt win the election??? Please apply your mind before blaming somebody.


hari
நவ 20, 2024 06:52

Mr GST vaigundam, every Indian knows Congress is behind all this revolt in Manipur..please read history before comment... don't read only murasoli....moreover BJP will take action...you don't worry....focus on GST


nv
நவ 19, 2024 20:54

தொடர்ந்து மூன்று முறை மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைக்காமல் தான் இருக்காங்க? அதனால தானே மணிப்பூர் மாதிரி கலவரங்களை தூண்டி விடுது காங்கிரஸ்?


பேசும் தமிழன்
நவ 19, 2024 20:39

ஆமாம்.... ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் ???.... ஒரு பழங்குடியின பெண்ணை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது பிஜெபி..... ஆனால் உங்கள் இண்டி கூட்டணி ஆட்கள் திரவுபதி முர்மு அவர்களை தோற்கடிக்க மும்முரமாய் வேலை செய்தீர்கள் .....தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் எங்கள் ஊர் திருமாவளவன் அவர்களும் அதற்கு உடந்தை .....உங்களை எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.


தாமரை மலர்கிறது
நவ 19, 2024 20:30

மணிப்பூர் ரொம்ப அமைதியா இருக்கே. இது நல்லா இல்லையே என்று ராகுல் அடிக்கடி மணிப்பூர் சென்று கலவரத்தை தூண்டிவிட்டார். இப்போது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று கார்கே முதலைக்கண்ணீர் வடிக்கிறார். பிள்ளையை கிள்ளிவிட்டு குழந்தையை அழவைத்து தொட்டிலை ஆட்டுவது காங்கிரஸின் பழக்கம்.


visu
நவ 19, 2024 20:25

கலவரத்தை தொடங்க வைத்தவர்கள்தான் அதைப்பற்றி கவலைப்படுகிறார்கள்


visu
நவ 19, 2024 20:23

70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆண்டபோது பிரச்சினையை தீர்க்காமல் இப்போ ஆட்சி மாறியதும் எந்த பிரச்சினைக்ளை தீர்க்க வேண்டும் தென்று ஐடியா கொடுக்கிறார்கள் அவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை இல்லையா ? சுட்டு தள்ளினல் மக்களை கொல்கிறார்கள் என்பார்கள் தீவிரவாத தாக்குதல் என்றால் கலவரம் என்பார்கள்.


முக்கிய வீடியோ