காதல்ஜோடி மர்ம மரணம்
திருவனந்தபுரம்:கொல்லம் அருகே காதல்ஜோடி நீர் நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரள மாநிலம் கொல்லம் அருகே பூயப்பள்ளியைச் சேர்ந்த மாணவி தேவநந்தா 17 . அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அம்பலகுன்றை சேர்ந்த மாணவர் ஷெபின் ஷா 17. கொட்டாரக்கரையில் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இருவரும் பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் பழகி வந்தனர். இது பின்னர் காதலாக மாறியுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. போலீசார் விசாரித்து வந்த நிலையில் அங்குள்ள தண்ணீர் தடாகத்தில் இறந்து கிடந்தனர். தண்ணீரில் தவறி விழுந்து இறந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.