உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியை நேசியுங்கள் தொழிலதிபர்கள் அட்வைஸ்

மனைவியை நேசியுங்கள் தொழிலதிபர்கள் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வாரத்தில் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்' என எல் அண்ட் டி., தலைவர் சுப்ரமணியன் கூறியுள்ள கருத்துக்கு, பிரபல தொழிலதிபர்கள் ஆனந்த் மஹிந்திரா, அடார் பூனாவாலா எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.எல் அண்ட் டி., நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன், 'வாழ்க்கையில் வெற்றிபெற வாரத்தில், 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். 'ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் எவ்வளவு நேரம் தான் மனைவியின் முகத்தை உற்று பார்ப்பீர்கள். 'அலுவலகம் சென்று வேலை செய்யுங்கள்' என, கூறினார். இது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஆட்டோமொபைல் உட்பட பல துறைகளில் ஈடுபட்டுள்ள மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, 'என் மனைவி அருமையானவர். அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்' என, பதிவிட்டுள்ளார்.இதை பகிர்ந்து, மருந்து தயாரிப்பு துறையில் ஈடுபட்டுள்ள 'சீரம் இந்தியா' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, 'ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளது சரி. என் மனைவியும் மிகவும் சிறந்தவர். ஞாயிற்றுக்கிழமைகளில் என்னை பார்த்துக் கொண்டிருக்க அவர் விரும்புகிறார். 'எவ்ளவு மணி நேரம் வேலை செய்கிறோம் என்பதைவிட, எந்தளவுக்கு தரமான வேலை செய்கிறோம் என்பதே முக்கியம்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜன 13, 2025 14:00

அப்பப்பா வர வர இந்த தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க முடியல


Rajarajan
ஜன 13, 2025 09:41

உண்மை. சில கார்போரேட்டில் சொல்வது, நீங்கள் நீண்ட நேரம் அலுவலகத்தில் இருப்பதால், உங்கள் வேலை திரன் உயராது. திட்டமிட்ட நேரத்தில், திட்டமிட்ட வேலைகளை முடிப்பதே புத்திசாலித்தனம் என்று. வேலையே நம்முடைய கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் தவிர, வேலை நம்மை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க கூடாது. காலையில் அலுவலகத்தில் முடிக்கவேண்டிய வேலையே முன்னரே திட்டமிட்டு, அதை நேர கட்டுப்பாட்டுடன் ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். அவசியம் மற்றும் அவசர வேலைகள் மட்டுமே, கூடுதல் நேர வேலைக்கு விதிவிலக்கு. அரசு அலுவலகங்கள் போல, கட்டாயமாக உட்கார்ந்து, இருக்கையை தேய்ப்பது என்பது, தனியார் வேலைக்கு ஒத்து வராது. மற்றொரு உண்மை என்னவெனில், மஹாராஜன் உலகை ஆளுவான், ஆனால், அவனுடைய மகாராணி, அவனை ஆளுவாள் என்பது நிதர்சனம். பெண்கள் வீட்டின் கண்கள்.


பாமரன்
ஜன 13, 2025 08:58

மனித உடல் டிசைன் படி வாரம் 90 மணி நேரம் ரெகுலரா வேலை செய்வது சாத்தியமில்லை... ஒரு வேலையில் சோம்பேறித்தனமா அமர்ந்திருக்கும் நேரத்தை கணக்கிட்டால் அப்பப்போ வரலாம்... அவ்ளோதான்...


Sam
ஜன 13, 2025 07:39

Artificial Intelligence (Generative AI) implement panniduvaanga. Apram 90hrs enna 300hrs kooda robot velai seyyum. Naama manaivi mugaththai thinamumei paarthu kondirukalaam.


Sankare Eswar
ஜன 13, 2025 06:52

மனைவியை உற்றெல்லாம் பார்க்க வேண்டாம். திராவிடத்தனமாக பார்க்காமல் ஒரு நொடி பார்த்தாலே மதிப்போடு அலட்சியம் இல்லாமால் உண்மை அன்போடு பார்த்தாலே போதும்... அதைத்தான் உண்மை சுதந்திரம் வேண்டும் அனைத்து பெண்களும் எதிர்பார்ப்பார்கள்.


Mediagoons
ஜன 13, 2025 01:46

காமடி அரசியல் செயகிறா மஹிந்திரா


Mediagoons
ஜன 13, 2025 01:33

L&T நிறுவனர் கூறியதில் மிக பெரிய அர்த்தமுள்ளது . ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். மோடியே 24X7 வேலைசெய்வதாகத்தான் பிதற்றிக்கொள்கிறார். மோடி ஆட்சியில் கார்போரேட்டுகளும் அரசியல் செய்கிறார்கள் .


Mediagoons
ஜன 13, 2025 01:30

மிகப்பெரிய பித்தலாட்டக்காரர்களில் இவரும் ஒருவர். இவனும் இவன் கம்பனியும் மிக பெரிய கொள்ளைக்காரர்கள் மக்களிடம் கொள்ளையடிப்பதற்காக பல காண்ட்ராக்ட் ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளாம். மக்களிடம் வாங்கும் இன்சூரன்ஸ் தொகையில் 30 சதவீத கீழ்மட்ட ஏஜெண்டுக்கு மட்டும் கொடுக்கிறான். இனியும் பல மட்டங்கள் உள்ளன .


Mediagoons
ஜன 13, 2025 01:27

இவர் கம்பனியில் உள்ளவர்கள் எதனை மணிநேரம் வேலைசெய்துகொண்டிருக்கிறார். எத்தனை பேரை மனைவி மக்களுடன் நிம்மதியாக இருக்கவிடாமல் தொல்லைகள் கொடுத்தார் .


baala
ஜன 13, 2025 09:36

அருமையான மனிதர். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதில் நிறைய பேர் புத்திசாலிகள். இவரின் தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைவருமே மகிழ்ச்சியுடன் தான் உள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை