உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஜி முதல்வரின் இறுதி நாளான அதிர்ஷ்ட எண்

மாஜி முதல்வரின் இறுதி நாளான அதிர்ஷ்ட எண்

ஆமதாபாத்: குஜராத் மாநில முதல்வராக, 2016 - 21 வரை பதவி வகித்தவர் பா.ஜ.,வை சேர்ந்த விஜய் ரூபானி, 68. நேற்று முன்தினம் ஆமதாபாதில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் இவரும் பயணித்தார். லண்டனில் உள்ள மகளை பார்க்க சென்றபோது, 'ஏர் - இந்தியா' விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் முதன்முதலில் வாங்கிய ஸ்கூட்டர் முதல், தற்போதைய கார் வரை அனைத்தும், 1206 என்ற எண் உடையவை. இது அவரது அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. இப்போது விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததும், 1206 என்ற தேதியில் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !