உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛பிசியான ரோட்டில் பெண் பலாத்காரம்: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கல்நெஞ்சக்காரர்கள்; ம.பி.,யில் அரங்கேறிய கொடூரம்

‛பிசியான ரோட்டில் பெண் பலாத்காரம்: காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கல்நெஞ்சக்காரர்கள்; ம.பி.,யில் அரங்கேறிய கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி.,யில் உஜ்ஜயினியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த சாலையில் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். அங்கிருந்தவர்கள், அந்த பெண்ணை காப்பாற்றாமல், அதனை வீடியோவாக பதிவு செய்து ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர்.உஜ்ஜயினி நகரில் கோய்லா பாதக் பகுதியில் பெண் ஒருவர் குப்பை பொறுக்கி கொண்டு இருந்தார். அந்த பகுதியில் இருந்த லோகேஷ் என்பவர், அந்த பெண்ணை அழைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அவருடன் அந்த பெண் சென்றார். சாலையிலேயே மயக்க மருந்து கலந்த மதுபானத்தை லோகேஷ் கலந்து கொடுத்துள்ளார். இதனையறியாமல் குடித்து அங்கேயே மயக்கமடைந்த அந்த பெண்ணை, அவர் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச்சென்றார்.இதனை பார்த்த அங்கிருந்த சிலர், அந்த பெண்ணுக்கு உதவாமல் மொபைல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது போலீசாரின் கவனத்திற்கு செல்லவே, லோகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

அப்பாவி
செப் 07, 2024 15:38

மதுபானமே மயக்கம் தரும். அதுல மயக்க மருந்து வேறயா. அந்தப் பொண்ணுக்கு இந்தப்.பழக்கம் வேற.


Azar Mufeen
செப் 07, 2024 03:50

இவனது கை கால்களை, பாதியளவு வெட்டப்படவேண்டும், பற்களை உடைத்து தாடயை சிதைக்க வேண்டும், இவன் உணவு உண்பதற்கு கூட சிரமப்படவேண்டும்


Nandakumar Naidu.
செப் 07, 2024 00:27

அரசாங்கம் அவனை அங்கேயே உயிரோடு எரித்துக்கோல்ல வேண்டும்.


pmr
செப் 06, 2024 22:13

நீதித்துறை தூங்குகிறதா


pmr
செப் 06, 2024 22:11

கண்ணீருடன் தெரிவித்துக்கொள்கிறேன் நாட்டு மக்கள் எங்கே செல்கிறார்கள்... இதை கவனிக்க நாட்டில் யாருமே இல்லையா


சமூக நல விரும்பி
செப் 06, 2024 22:01

சில மக்கள் மாக்களாக மாறிவிட்டனர்


ஆரூர் ரங்
செப் 06, 2024 21:13

ஒரத்தநாடு கூட்டுப் பலாத்காரம் நடந்து ஒரு வாரமாகிறது . எந்த ஒரு ஊடகத்திலும் விவாதமில்லை. முன்பு விருதுநகரில் நடந்த நிகழ்வை மூடி மறைத்தனர். செலக்டிவ் ரிப்போர்ட்டிங் தமிழக காட்சி ஊடகங்களின் வழக்கம்.


J.Isaac
செப் 06, 2024 22:19

ம.பி நடந்ததை நியாயப்படுத்த வேண்டாம் தவறு எங்கு நடந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும்..


தாமரை மலர்கிறது
செப் 06, 2024 20:08

கல்நெஞ்சக்காரர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள். இங்கும் உள்ளார்கள்.


J.Isaac
செப் 06, 2024 19:48

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டருக்கு போர்கொடி பிடித்தவர்கள், ம.பி இந்த ஏழை மகளுக்காக போராடுவார்களா? அரசை பதவிவிலக குரல் எழுப்புவார்களா?


முருகன்
செப் 06, 2024 19:34

பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களை நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்


புதிய வீடியோ