உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டவாளத்தில் ஒரு டிராக்டர்! வெலவெலத்து போன டிரைவர்! அப்புறம் நடந்த மேஜிக்

தண்டவாளத்தில் ஒரு டிராக்டர்! வெலவெலத்து போன டிரைவர்! அப்புறம் நடந்த மேஜிக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்; மத்தியபிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் டிராக்டர் நிறுத்தப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிவேக ரயில்

இந்த சம்பவம் ஜபல்பூர்-இட்டார்சி ரயில் வழித்தடத்தில் குராம்கேடி என்ற பகுதியில் நடைபெற்றது. தண்டவாளத்தில் சோம்நாத் ரயில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் குறுக்கே டிராக்டர் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதை ரயில் டிரைவர் கண்டார்.

டிராக்டர்

கண நேரத்தில் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக சுதாரித்து பிரேக்கை இயக்கினார். இதன் காரணமாக டிராக்டர் மீது மோதாமல் ரயில் அங்கேயே நின்றது. டிரைவரின் துடிப்பான சமயோசிதம் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பாதுகாப்பு படை

இந்த சம்பவம் குறித்து ரயில் டிரைவர் உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினார். இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக டிராக்டரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

பழுது

பின்னர் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு உரிமையாளரை கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போது டிராக்டர் தண்டவாளத்தை கடக்கும் போது பழுதடைந்துவிட்டதாகவும், அதை சரி செய்ய முடியாமல் அங்கேயே நிறுத்திவிட்டு அதன் உரிமையாளர் சென்றதையும் கண்டுபிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ரகுகுமார்
செப் 10, 2024 16:06

தண்டனையே கிடையாத ராஜ்ஜியம் நம்மளது. நாளக்கி கப்பலையே கொண்டாந்து நிறுத்தி தண்ணி இல்லை அதாம்பாங்க.


subramanian
செப் 10, 2024 13:59

நாடு முழுவதும் பெரிய அளவில் சதி நடக்கிறது. சாட்டிலைட், தொலைநோக்கி உதவியுடன் டிரைவர், கார்ட், நிலைய அதிகாரிகள், தண்டவாளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் விழிப்புணர்வுடன் இருந்து ரயில் பாதையில் ஏதாவது இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


Sivagiri
செப் 10, 2024 12:49

டௌட்டுதான் . . .


Nandakumar Naidu.
செப் 10, 2024 12:28

கண்டிப்பாக இது சதியாகதான் இருக்கும். எப்படி விட்டு விட்டு செல்லாம்? ஏதாவது ஒரு துணியை எடுத்து, அசைத்து வரும் இரயிலை தடுத்து நிறுத்த முயற்சி செய்துதிருக்கலாம். விட்டு விட்டு சென்றது பெரும் குற்றம். கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்.


Rasheel
செப் 10, 2024 12:05

மத வெறி பிடித்த கூட்டத்தால் மற்றும் பாக்கிஸ்தான் தீவிரவாத தூண்டுதலால் மிக பெரிய சதி நாடு முழுவதும் நடப்பது தெரிகிறது.


ponssasi
செப் 10, 2024 11:16

யார் அவர்? அவர் பெயர் என்ன? இரு தினங்களுக்கு முன் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் வைக்கப்பட்டிருந்தது, தமிழகத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது. நாடுதழுவிய அளவில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடத்த சதி நடப்பதாக தோன்றுகிறது. குறிப்பிட்டு வந்தேபாரத் மீது கல்வீசி அதை சேதப்படுத்தினர், இப்பொது அவர்கள் கவனம் வேறு திசையில் மக்களை கொல்ல திட்டம் தீட்டுகின்றனர்


சமீபத்திய செய்தி