வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மதம் மாறிய குக்கீஸ்களால் என்றைக்குமே ஆபத்து தான் ...
மேலும் செய்திகள்
மக்கள் தொடர்பு முகாம் ரத்து
14-Nov-2024
புதுடில்லி: மணிப்பூர் நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக, மஹாராஷ்டிராவில் இன்று நடக்க இருந்த தேர்தல் பிரசார பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரத்து செய்தார்.இது குறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: மஹாராஷ்டிராவில், வரும் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று அங்கு நடக்க இருந்த பேரணியை ரத்து செய்து விட்டு டில்லி திரும்பினார் அமித்ஷா.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நேற்று இரவு பா.ஜ., மூத்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.இதனை தொடர்ந்து மாநில முதல்வர் பிரேன் சிங் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக, அமித்ஷா, மஹாராஷ்டிராவில் இன்று நடக்க இருந்த சில பேரணிகளை ரத்து செய்தார்.மணிப்பூர் நிலைமை பற்றி ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க, உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதம் மாறிய குக்கீஸ்களால் என்றைக்குமே ஆபத்து தான் ...
14-Nov-2024