உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., அமைச்சரவை விரிவாக்கம்: 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

மஹா., அமைச்சரவை விரிவாக்கம்: 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: மஹாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் 39 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ' மஹாயுதி' கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. கடந்த டிச., 4ம் தேதி முதல்வராக பா.ஜ.,வின் பட்னவிஸ் பதவியேற்றார். துணை முதல்வர்களாக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றனர். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகாக்கள் குறித்து மூன்று கட்சிகளும் பேசி வந்தன. இதில் ஒரு மித்த முடிவு ஏற்பட்டது. இதனையடுத்து, சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o80g6qnu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கமாக அமைச்சரவை விரிவாக்கம் தலைநகர் மும்பையில் நடக்கும் நிலையில், இன்று நாக்பூரில் நடந்தது. இதற்கு முன்னர் 1991ம் ஆண்டு மட்டும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாக்பூரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சட்டப்படி, இம்மாநிலத்தில் 43 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். இன்று, 39 எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பா.ஜ.,வைச் சேர்ந்த 19 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேரும், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த 9 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பட்னவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman Srinivasan
டிச 15, 2024 23:08

கூட்டணி பிளவு படாமல் அரசு ஐந்தாண்டு நிலைக்க வேண்டுமென்றால் மூன்று டஜன் MLA களுக்கு மந்திரி பதவி கொடுத்து கட்சிகளை திருப்தி படுத்தணும்.


sankaranarayanan
டிச 15, 2024 21:12

பா.ஜ.,வைச் சேர்ந்த 39 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேரும், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த 9 பேரும் பதவியேற்றுக் கொண்டனர் அப்படி என்றால் மொத்தம் 59 பேர் மந்திரிகளா இருக்கவே இருக்காது. அதிகமாக 43 பேர்கள்தான் அமைச்சர்களாகமுடியும் எங்கேயே தவறு உள்ளது


Anantharaman Srinivasan
டிச 15, 2024 22:58

See the news correctly .. 39 சரியே. பா.ஜ.,வைச் சேர்ந்த 19 பேரும், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேரும், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த 9 பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.


kantharvan
டிச 15, 2024 19:49

வெறும் எட்டு மந்திரிகளை மட்டுமே வைத்து கொண்டு சிறப்பான நிர்வாகம் தந்தாரே காமராசர் ???


ganesh ganesh
டிச 15, 2024 20:27

தமிழ் நாட்டிற்கு சொல்லவும் .


ஆரூர் ரங்
டிச 16, 2024 07:42

மக்கள்தொகை மற்றும் பொருளாதார விரிவாக்கத்தை கணக்கிலெடுத்துக் கொண்டால் சரியென்று புரியும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 15, 2024 19:07

சோ அவர்களின் முஹம்மது பின் துக்ளக் திரைப்படம் நினைவுக்கு வருகிறது .....


புதிய வீடியோ