உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா., ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நவ.,23ல் ஓட்டு எண்ணிக்கை

மஹா., ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நவ.,23ல் ஓட்டு எண்ணிக்கை

புதுடில்லி : மஹாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்கண்டில் இரு கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே பிரிவு), தேசிய வாத காங்கிரஸ்(அஜித் பவார் பிரிவு) கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3pos51rc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதேபோல் 82 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இங்குள்ள 82 தொகுதிகளில் ஒரு இடத்திற்கு நியமன உறுப்பினர் நியமிக்கப்படுவார். 81 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கும். இரு மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு, அங்கு தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.இதன்படிமஹாராஷ்டிராவில் ஒரே கட்டமாக தேர்தல் நவம்பர் 20 ம் தேதி நடக்கிறது.ஜார்க்கண்டில் நவ., 13 மற்றும் நவ., 20ம் தேதி என இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது.இரு மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் நவ.,23ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இடைத்தேர்தல்

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ராஜினாமா செய்த கேரளா மாநிலம் வயநாடு தொகுதியும் மஹாராஷ்டிராவில் உள்ள நான்டெட் லோக்சபா தொகுதியும் காலியாக உள்ளது. மேலும் உத்தரகண்டில் ஒரு சட்டசபை தொகுதி மற்றும் பல மாநிலங்களில் 47 சட்டசபை தொகுதிகளும் காலியாக உள்ளன. இதற்கும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.இதன்படி வயநாடு லோக்சபா தொகுதி மற்றும் 47 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.,13ம் தேதியும்உத்தரகண்டில் உள்ள ஒரு சட்டசபை தொகுதி மற்றும் நான்டெட் தொகுதிக்கு நவ.,20ல் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

பிரியங்கா போட்டி

ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anantharaman Srinivasan
அக் 15, 2024 22:19

மஹாராஷ்டிராவில் கருத்து கணிப்புக்களை பொய்யாக்க பா.ஜ.க., தயார்.


kulandai kannan
அக் 15, 2024 21:31

கருத்துக்கணிப்பாளர்களுக்கும், தப்பிக்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும்.


Rajendra Kumar
அக் 15, 2024 19:59

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் ஒரே கட்டமான தேர்தல் என்று பொருளல்ல. என்ன செய்வது ஞானசூனியங்களுக்கு பாடம் எடுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை.


Gnana Subramani
அக் 15, 2024 18:17

81 சட்ட மன்ற தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியவில்லை. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கம் வேறு


appaavi
அக் 15, 2024 18:01

அடடே... ஒரு நேசன்.. ஒரே எலக்சன் இப்போதைக்கு தேறாது போலிருக்கே...


kulandai kannan
அக் 15, 2024 17:17

ரண்டக்க..ரண்டக்க


Anand
அக் 15, 2024 17:04

கூட்டுக்களவாணிகள் தேர்தல் வாக்கு எந்திரத்தின் மீது இப்போதிருந்தே பழி போட ஆரம்பித்துவிட்டார்கள்....


Oviya Vijay
அக் 15, 2024 16:40

கெடுவான் கேடு நினைப்பான் என்னும் பழமொழி பிஜேபிக்கு பொருந்தும். ஹரியானா தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிராவில் எதிரொலிக்க வாய்ப்பில்லை.


Anand
அக் 15, 2024 17:06

இப்படித்தான் ஹரியானா தேர்தல் அறிவித்தபோதும் இருநூறு ரூவா அடிமைகள் கூறியது.


Kannan Chandran
அக் 15, 2024 18:03

அந்த பழமொழி 200 ரூபாய் கூலிக்கு கம்பு சுற்றும் தங்களைபோன்ற உ.பிக்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவுபடுத்துகிறோம்


A.SESHAGIRI
அக் 15, 2024 16:39

பல மாநில இடைத்தேர்தல்கள் நவம்பர் 13ம் தேதி நடைபெறும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை