உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகா கும்பமேளா இன்று நிறைவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மகா கும்பமேளா இன்று நிறைவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரயாக்ராஜ் : திரிவேணி சங்கமத்தில் ஜன.13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா இன்று (பிப்.26) நிறைவு பெறுகிறது. இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி இருக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r7i79dno&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று நிறைவு நாளையொட்டி முன் எப்போதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இன்று மகா சிவராத்திரி விழாவையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகிலேயே நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

குமார்தேவ்
பிப் 26, 2025 15:20

கும்ப்மேளாவுக்கு வந்தவங்க 65 கோடின்னு அடிச்சு உடத்தெரியும். மக்கள் தொகை கணக்கெடுக்க முடியாத தத்திகள். இன்னும் 140 கோடிதானாம்.


சமீபத்திய செய்தி