உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு: 45 நாட்களில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்; உ.பி., முதல்வர் தகவல்

மஹா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு: 45 நாட்களில் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்; உ.பி., முதல்வர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் மொத்தம் 45 நாட்களில், 66 கோடியே 21 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.திரிவேணி சங்கமத்தில் ஜன.13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா இன்று (பிப்.26) நிறைவு பெறுகிறது. இதுவரை 66 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி இருக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dwyiz1ya&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக இன்று யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சமத்துவத்தின் மாபெரும் திருவிழா, மஹா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.பிரயாக்ராஜில் ஜனவரி 13ம் தேதி துவங்கி, மகாசிவராத்திரி நாளான இன்று (பிப்.,26) வரை, மொத்தம் 45 நாட்களில், 66 கோடியே 21 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். இது உலக வரலாற்றிலேயே முக்கியமானது.கும்பமேளா நிகழ்ச்சி தெய்வீகமாகவும், மகத்தானதாகவும் மாறி உலகம் முழுவதும் ஒற்றுமையை எடுத்துரைக்கிறது. இந்த சாதனைக்கு காரணமான அனைத்து மக்களுக்கும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கிறேன்.உள்ளாட்சி நிர்வாகம், போலீசார், துப்புரவுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி. அன்னை கங்கை, கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். இவ்வாறு உ.பி., முதல்வர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

J.Isaac
பிப் 27, 2025 14:52

எப்படி கணக்கிட்டார்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்தால் நம் நாட்டின் ஜனத்தொகையை கணக்கிட, எத்தனை கோடி மக்கள் வீடில்லாமல் வீதிகளில் தூங்குகிறார்கள் என்பதை எளிதாக கணக்கிடலாம்


SENTHIL NATHAN
பிப் 27, 2025 00:39

உரிய ஆதாரங்களுடன் நுருபித்து காட்ட வேண்டும். சும்மா உதார் விட கூடாது


J.Isaac
பிப் 27, 2025 20:53

உண்மை. குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல்


இறைவி
பிப் 26, 2025 22:45

ஆமாம். மத்திய பாஜாக அரசும், உபி யோகியின் அரசும் பொய்யை சொல்வதாகவே இருக்கட்டும். அதனால் உனக்கு என்ன ஆயிற்று? பிரேயாக்ராஜில் யோகி கட்டமைப்புக்காக செலவழித்தது போல பல மடங்கு வருமானம் வந்து விட்டது. அங்கு கமிஷன் அடிக்காத அரசு. இங்கு இரண்டு கழகங்களும் மாறி மாறி தமிழ் நாட்டை கொள்ளை அடித்ததுதான் மிச்சம். இனி வரும் காலம் முழுதும் கழக அடிமைகள் பொறாமையில் வெந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 26, 2025 22:25

ஹர ஹர ஹர ஹர மஹாதேவ் .........


chakra balaji
பிப் 26, 2025 22:07

Around 140 cr population in india.


Ramesh Sargam
பிப் 26, 2025 22:05

அடுத்த கும்பமேளா தமிழகத்தில் . ஆம், கூவம், அடையாறு மற்றும் பாலாறு இணைக்கப்பட்டு, அந்த சங்கமத்தில் ஒரு கும்பமேளா விழா ஏட்பாடு தமிழக முதல்வர் செய்வார். அதில் எல்லா மதத்தினரும் புனித நீராடலாம்.


karthik
பிப் 26, 2025 21:42

கடவுள் அருளாலே சாதித்து காட்டிவிட்டீர்கள் யோகி அய்யா - வாழ்த்துக்கள்.


venugopal s
பிப் 26, 2025 21:24

மஹா கும்பமேளா வில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை பத்து கோடி பேர் கூட இல்லை என்பது தான் உண்மை.இதை என்னால் நிரூபிக்க முடியும்.மத்திய பாஜக அரசும் உத்தரப்பிரதேச அரசும் பச்சைப் பொய் சொல்கின்றனர்!


karthik
பிப் 26, 2025 21:48

உன்னைய மாதிரி ஒண்ணுக்கும் ஒதவாத ஜென்மங்க நெறய சுத்திட்டு இருக்கானுங்க....நீயும் அங்க போயி சேர்ந்து உருளு....


Nandakumar Naidu.
பிப் 26, 2025 21:56

ஆமாம், எல்லோரும் சொல்கிறார்கள், நீங்கள் ஹரிச்சந்திர மகாராஜாவின் வாரிசு என்றும் மற்றும் நீங்கள் உண்மையைத்தான் பேசுவீர்களாம். அந்த உண்மையை பிரயாக்ராஜ் போய் சொல்லு பார்க்கலாம்


guna
பிப் 26, 2025 21:59

உனக்கு ஐந்து அறிவுக்கும் குறைவு என்பது நிருபிதுவிட்டாய்


sridhar
பிப் 27, 2025 06:28

ஏதோ பெரிய மனசு பண்ணி பத்து கோடி என்று சொன்னீர்களே . அது போதும். அங்கே வேறு ஒரு சுவையான நிகழ்ச்சி - உங்க ஆளுங்க ஸ்டால் போட்டு பைபிள் குடுத்தாங்க , பொது மக்கள் அடி பின்னிட்டாங்க .


Petchi Muthu
பிப் 26, 2025 21:18

சிவனே போற்றி போற்றி... தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி.... வாழ்க சிவமயம் வாழ்க சிவமயம்


புதிய வீடியோ