உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வள்ளலார் எழுப்பிய குரல்; வள்ளுவர் எழுதிய குறள்; மகா விஷ்ணுவுக்கு வலுக்கிறது ஆதரவுக்குரல்!

வள்ளலார் எழுப்பிய குரல்; வள்ளுவர் எழுதிய குறள்; மகா விஷ்ணுவுக்கு வலுக்கிறது ஆதரவுக்குரல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வள்ளலார், திருவள்ளுவர் கூறியதைத் தான் மகா விஷ்ணு கூறியிருப்பதாகவும், அவர் சொந்தமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கைது நடவடிக்கைக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சொற்பொழிவாற்றிய பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகா விஷ்ணு, சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று சென்னை விமான நிலையத்தில் வைத்து மகா விஷ்ணுவை கைது செய்த போலீசார், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது, தன்னை சித்தர்கள் வழிநடத்துவதாகவும், அவர்கள் தன்னிடம் பேசியதை வைத்து தான், நிகழ்ச்சிகளில் பேசி வருவதாக போலீசாரிடம் மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தப்பில்லை

இதனிடையே, சென்னை விமான நிலையத்திற்கு மகா விஷ்ணுவை சந்திக்க வந்த ஜனனி எனும் ஆதரவாளர் கூறியதாவது: நல்லா அட்வைஸ் கொடுப்பார். அவரது கைது அதிர்ச்சியளிக்கிறது. நல்ல விஷயங்களை சொல்லி கொடுப்பார். அந்த வீடியோவை பார்த்துள்ளேன். அவர் ஏதும் தவறாக பேசவில்லை. அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். பள்ளிகள் தான் அவரை அழைத்துள்ளன. அதுவும், தலைமை ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய பிறகே, மாணவர்கள் மத்தியில் அவர் பேசியுள்ளர். அதுவும் ஆன்மிகம் பற்றி மட்டும் தான் பேசினார்.

வெறுப்பு

மகா விஷ்ணு பேச்சுக்கு அந்த ஒரு ஆசிரியர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேறு யாரும் அங்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருவேளை, சொந்த வெறுப்பு காரணமாக, அந்த ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.

திருக்குறளின் கருத்து

3 அல்லது 4 ஆண்டுகளாக அவரது பேச்சை நான் கேட்டு வருகிறேன். அனைத்து வயதினருக்கும் புரியும் வகையில் தனது கருத்துக்களை தெளிவாக பேசக் கூடியவர். அவரது பேச்சுக்கள் அறிவியல் பூர்வமாக இல்லை என்று கூறி விட முடியாது. அதில் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை. வள்ளலார், திருக்குறள் கூறியதைத் தான் மகா விஷ்ணு கூறியிருக்கிறார். அவர் சொந்தமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை, எனக் கூறினார்.

ஊக்கமளிக்கும் பேச்சு

அதேபோல, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குகன் என்பவர் கூறுகையில், '8 ஆண்டுகளாக குருஜி மகாவிஷ்ணுவை தெரியும். சித்தரின் கருத்தியல், அவர்களின் வாழ்க்கை முறைகளை மக்களிடம் கொண்டு செல்வது தான் அவரது பணி. அவர் பேசிய வார்த்தை அனைவரையும் வருத்தத்திற்குள்ளாக்கியது தான், ஆனால், அது அவருடைய கருத்து கிடையாது. திருவள்ளுவர் சொன்னதையும், திருவருட்பாவில் இருப்பதையும் தான் சொல்லியுள்ளார். அவரை வரவழைத்து இப்படி அசிங்கப்படுத்துவது மன வருத்தமாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் மறுபிறவி குறித்து அவர் பேசியுள்ளார். அவர் பேசியது ஆன்மிக சொற்பொழிவு கிடையாது. ஊக்கமளிக்கும் பேச்சு தான்,' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 118 )

God yes Godyes
அக் 08, 2024 19:03

போன பிறவியில் ஊரை ஏமாற்றி பலரை வயிற்றில் அடித்து பிழைத்தவன் அடுத்த பிறவியில் பிச்சைக்காரனாக மாறி ஆதி திராவிடன் என பட்டப்பெயர் சூட்டப்படுகிறான்.


God yes Godyes
அக் 08, 2024 18:58

உயிருக்கு அழிவில்லை. அவை கிரகங்களின் பார்வையில் இயங்குகின்றன அது பிறவி இல்லாத போது பிரபஞ்ச உயிரோட்ட நுண் அலைகளுடன் ஒன்றி கர்மாக்கள் கணக்கு முடிந்தவுடன் மறு பிறவி கிடைக்கும்.


Lion Drsekar
அக் 06, 2024 17:52

பக்தப் பிரஹலாதன் கதை இதை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும், ஹிரண்யகசிபு பிரஹலாதன் கடவுள் பக்தியால் மிகவும் எரிச்சலடைந்தார், மேலும் தனது மகன் தன்னைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்று விரும்பினார். ஆனால் பிரஹலாதன் பகவான் விஷ்ணு மீதான பாசத்தை தொடர்ந்தார், மேலும் அவரது தந்தை தனது வழியை மாற்றுவதற்காக அவரை துன்புறுத்தினார்.பிரஹலாதனின் பாசத்தின் மீதான கோபத்தால், ஹிரண்யகசிபு ஒருமுறை அவரை கொதிக்கும் எண்ணெயில் ஊற்றினார், ஆனால் பிரஹலாதன் காயமின்றி வெளியே வந்தார் எனவே, அடுத்த முறை, ஹிரண்யகஷ்யபு சிறுவனை மலையிலிருந்து தூக்கி எறிந்தார், அதே நேரத்தில் மற்றொரு முறை நெருப்பில் வீசப்பட்டார். ஆனால் ஒவ்வொரு முறையும், கடவுள் பிரஹலாதனை எந்த காயமும் இல்லாமல் பாதுகாத்தார். இது ஹிரண்யகஷ்யபுவை மேலும் கோபப்படுத்தியது. பிரஹலாதன் ஹிரண்யகஷ்யப்பின் மகன், எனவே விஷ்ணுவை வணங்குவதை நிறுத்தும்படி அவனை சமாதானப்படுத்த முயன்றான் ஆனால் பிரஹலாதன் விஷ்ணுவின் விசுவாசி, அவன் நம்பவில்லை. ஹிரண்யகஷ்யப் இதை விரும்பவில்லை, ஆனால் பிரஹலாதன் தனது பக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். எனவே, பிரஹலாதனைக் கொல்ல ஹிர்ண்யகஷ்யப் ஒப்புக்கொண்டார். இறுதியாக, ஹிரண்யகஷ்யப் தனது சகோதரி ஹோலிகா என்ற கடல் அரக்கனை பிரஹலாதனைக் கொல்ல அழைத்தார். ஹோலிகாவை நெருப்பால் அழிக்க முடியாத வரம் வழங்கப்பட்டது. அவள் பிரஹலாதனைத் தன் மடியில் எடுத்துக்கொண்டு எரியும் நெருப்பில் உட்காரத் தேர்ந்தெடுத்தாள். நெருப்பு அவர்களை சூழ்ந்தபோது பிரஹலாதன் சத்தமாக விஷ்ணுவின் உதவியை அழைத்தான். அனைவருக்கும் ஆச்சரியமாக, தீ மெதுவாக ஹோலிகாவை எரித்தது, அவள் எரிந்து இறந்தாள். பிரஹலாதன் பாதுகாப்பாகவும், சத்தமாகவும் நடந்தான். பிறகு ஒரு நாள் ஹிரண்யகஷ்யபர் பிரஹலாதனிடம், “உன் கடவுள் உன்னைக் காப்பார் என்று சொல். அவர் எங்கிருக்கிறார் என்பதை எனக்கு வெளிப்படுத்த முடியுமா?" பிரஹலாதன், “கடவுள் எங்கும் இருக்கிறார்” என்றார். பிரஹலாதன் ஒரு தூணின் அருகில் நின்று கொண்டிருந்தான், அதனால் அரசன், “உங்கள் கடவுள் எல்லா இடங்களிலும் இருந்தால், அவர் இந்தத் தூணில் இருக்கிறாரா?” என்று கேட்டார். பிரஹலாதன், “ஆம்” என்று பதிலளித்தான்.கடவுள் எங்கும் இருக்கிறார். பக்தியுடன் கடவுளின் பெயரை ஒருவர் உச்சரித்தால், அவர் எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவரைப் பாதுகாக்கிறார். கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார், அவர் இருக்கிறார் என்று நாம் நம்ப வேண்டும். அவர் அனைவரையும் மற்றும் யாரையும் பாதுகாக்கிறார், ஒருவர் அவரை இதயத்துடன் அழைக்க வேண்டும். தூனைப் பிளந்து இறைவன் நேரில் வந்து ஹிரண்யனை வதம் செய்தார் என்பது முடிவு அதை நாம் நேரில் காண்பது அரிது , ஆனால் மற்ற கதா பாத்திரங்களை தற்போது பேரு பெற்றிருக்கிறோம், வாழ்க வளமுடன், ஹிரண்யாய நமஹ


MUTHU
செப் 27, 2024 09:56

முற்பிறவி கருத்துக்கள் பற்றி யார் என்ன சொல்லியிருந்தாலும், கௌதம புத்தர் தனது வாழ்க்கையின் 500 முற்பிறவிகளில் தனது வாழ்க்கை பற்றி கூறியிருக்கின்றார். இன்றைய அறிவியல் இதனை நிரூபிக்கவும் இல்லை. மேலும் புறக்கணிக்கவும் இல்லை. இந்த கொள்கைகள் உண்மை என்று நான் புத்த மதத்தின் அடிப்படை கொன்டே நம்புகிறேன். பௌத்தத்தின் அடிப்படையே பிறவி கோட்பாடுகள் தான். ஆபிரகாமிய மத உருவாக்கத்திற்கு முன் அப்பகுதியில் பரவாலாக இருந்த இந்த கொள்கைகள் ஆப்ரஹாமிய மத உருவாக்கத்திற்குப்பின் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டது. மேலும் சராசரியாக ஒரு முட்டாளுக்கு அறிவாளியை பார்த்து பொறாமை வரும். ஏழைக்கு பணக்காரனை பார்த்து கோபம் வரும். சுமாரான உடையணிந்தவன் நல்ல உடையணிந்தவனை பார்த்து ஒதுங்குவான். ஒரு ஊனமுற்றவருக்கு ஒரு இயல்பான நபரை பார்த்து பொறாமை வரும். குட்டையானவனுக்கு சற்றே வளர்ந்த ஒருவரை பார்த்து பொறாமை வரும். ஒருத்தி அழகு. அவளைப்பார்த்து அழகற்றவளுக்கு எப்பொழுதும் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. ஒருவன் ஏமாற்றிக்கொன்டே இருப்பவன். ஒருவன் ஏமாந்து கொன்டே இருப்பவன். ஒரு நோயாளிக்கு ஒரு நோயற்றவனை பார்த்து பொறாமை வரும். இதை வெளியில் சொல்லாவிட்டாலும் மனதிற்குள் ஒரு பெருமூச்சு இதைப்போன்ற எல்லாருக்கும் ஏற்பட்டுக்கொன்டேயிருக்கும். இதெற்கெல்லாம் காரணம்... காரணம் ஒருபுறமிருக்கட்டும். இவர்களுக்கெல்லாம் எப்பொழுதும் தன்னை உண்மை, அழகின்றி, கருப்பாய், ஏழையாய், முட்டாளாய் படைத்த படைப்பின் மேல் அல்லது கடவுளின் மேல் எப்பொழுதும் ஒரு கோபம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அவர்கள் வெளியில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுவே உண்மை. இவ்வாறு தனது ஊனத்தினை ஒருவன் குறிப்பிட்டு சொன்னவுடன் பல ஆண்டுகளாய் அடக்கப்பட்ட வெறுப்பு எல்லாம் சொன்னவன் மேல் பாய்ந்து வைத்தது. உண்மை இதுதான். எல்லாம் வல்ல இறைவன் ஏன் இந்த ஏற்ற தாழ்வுள்ள சமுதாயத்தினை படைத்தான்? மற்ற மதங்கள் இதனை சரிசெய்ய மேலோட்டமாய் இறைவனின் படைப்பை குறை சொல்ல கூடாது. இறைவன் நல்லவன். நாம் தான் தவறு செய்கின்றோம். இறைவன் கொடுத்ததை கொள்ள வேண்டும் குறை சொல்ல கூடாது என்று பூசி மெழுகி விட்டன. ஆனால் இந்திய முனிவர்கள் இதற்கான விடை கண்டுபிடிக்க அதிகம் முயன்றுள்ளனர். முற்பிறவி கொள்கை என்பது வெறும் பூசி மெழுகும் கற்பனை கொள்கை அல்ல. பிறவி என்பதனை காட்டிலும் கர்மவினை என்று சொல்வது சாலப்பொருந்தும்.


tmranganathan
செப் 24, 2024 07:16

மகேஷ் ஒரு பொய்பேசும் மந்திரி.


MP.K
செப் 13, 2024 11:01

மகா விஷ்ணு அந்த ஆசிரியரை கையாண்ட விதம் தான் தவறு. வள்ளலார் வள்ளுவர் வழி என்று இவ்வளவு பேசும் மகா விஷ்ணு ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியரை சமாதானம் செய்ய சமாளிக்க முடியவில்லை என்பதே அபத்தம் கொடுமை. மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவருக்கு ஏற்றபடி கண்ணியமாக பதில் பேசி சமாளித்திருக்க வேண்டும். எதிர்கருத்து மாற்றுக்கருத்து வந்தால் அதையும் சமாளிக்க பதில் கூறுவது என்பது ஒரு கலை அதனால் ஆன்மீகத்தில் மகா விஷ்ணுவுக்கு அனுபவம் போதாது


angbu ganesh
செப் 13, 2024 14:18

தேவ இல்லாம பிரச்சனை உண்டாக்கி இருக்காறார் அந்த ஆசிரியர் அதை அவரும் நல்ல விதத்தில் சொல்லி இருக்கலாமே என்னமோ எல்லாம் தெரிஞ்சுது ஏகாம்பரம் மாதிரி பேசின இப்படித்தான்


ArGu
செப் 11, 2024 20:50

பிச்சை எடுக்க இந்தியா வந்தது... கும்பி நிரம்பியவுடன் பரிசுத்த ஆவி ஆகிவிட்டதோ?


kantharvan
செப் 12, 2024 10:27

எப்புடி சர்ச்சில் பிச்சை எடுத்து விட்டு இப்போது நிரம்பிய உடன் அந்நிய மதம் ஆகி விட்டதோ ???


sankar
செப் 11, 2024 17:18

ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் - என்கிறது மக்கள் காப்பியம் சிலப்பதிகாரம் -


kantharvan
செப் 12, 2024 10:28

எது ஆயிரம் வர்ஷம் ஆன பழைய கதைகளா??


Apposthalan samlin
செப் 11, 2024 13:47

தமிழ் நாட்டில் 90 % மக்கள் எதிர்பு தான்


sankar
செப் 12, 2024 09:40

உன்னை போன்ற அந்நிய அடிமைகள் எதிர்க்கத்தான் செய்யும்


B RAJARATHINAM
செப் 11, 2024 08:46

என்னமோ கிறிஸ்தவர்கள் மட்டும்தான் கல்வி போதிப்பார்கள் மற்றவர்கள் எல்லாம் சும்மா இருப்பார்கள் எனநனைப்பு இந்த மதம்மாறிகளுக்கு.சரி கிறிஸ்துவர்கள் நடத்தும் பள்ளிகள் அரசு உதவி பெற்றுதானே சம்பளம் தருகின்றன.ஆசிரியர்கள் முக்கால்வாசி பேர் கிறித்துவர்கள்.அங்கு இவர்களின் சர்ச் இருக்கும்.இது மதம் பரப்பும் நோக்கில் தான் உள்ளது.மதம்மாற்றுவதுதான் இவர்களின் முழு வேலை.நீங்கள் எல்லாம் ஜெரூசலம் சென்று விடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை