உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாதேவப்பா யோசனை எம்.பி., சுரேஷ் கிண்டல்

மஹாதேவப்பா யோசனை எம்.பி., சுரேஷ் கிண்டல்

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் வேட்பாளராக, முதல்வர், துணை முதல்வர் தகுதியானவர்கள் என, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா கூறியதற்கு, எம்.பி., சுரேஷ் கிண்டல் அடித்து உள்ளார்.பெங்களூரில் நேற்று முன்தினம், அமைச்சர் மஹாதேவப்பா, ஊடகத்தினர் சந்திப்பில், 'லோக்சபா தேர்தலில் வேட்பாளராக, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் தகுதியான வேட்பாளர்கள். குறிப்பாக சிவகுமார் மிக சிறந்த வேட்பாளர்' என கூறியிருந்தார்.தன்னை பலவந்தமாக லோக்சபா தேர்தலில் களமிறக்க முற்படுவதால், முதல்வர், துணை முதல்வரையே வேட்பாளராகும்படி, அமைச்சர் மஹாதேவப்பா மறைமுகமாக கூறியிருந்தார்.இவருக்கு பதிலடி கொடுத்த எம்.பி., சுரேஷ், 'அமைச்சர் மஹாதேவப்பா, நல்ல ஆலோசனையை கூறியுள்ளார். அவரது ஆலோசனையை வரவேற்கிறேன். யாரை களமிறக்க வேண்டும் என்பதை, கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்' என பதிலடி கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ