உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல் காரியம்...! சனாதன வாரியம்!: மனது வைக்குமா மத்திய அரசு?

முதல் காரியம்...! சனாதன வாரியம்!: மனது வைக்குமா மத்திய அரசு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் பிரயாக்ராஜில் வரும் ஜனவரி 13ம் தேதி துவங்கும் கும்ப மேளா இந்த ஆண்டு இன்னொரு வகையில் சிறப்பு பெறுகிறது. சனாதனத்திற்கு என தனி வாரியம் அமைக்கும் குரல் வலுப்பெறுகிறது.வரும் ஜனவரி 26ம் தேதி திரிவேணி சங்கமத்தில் நான்கு சங்கராச்சார்யார்கள் மற்றும் 13 அகாரா அமைப்பின் தலைவர்கள் கூடி, சனாதன வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி சனாதன வாரியம் அமைக்குமாறு வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சனாதன தர்மத்தைக் காக்கவும், ஹிந்து கோயில்கள், நிலங்களை மீட்கவும் சனாதன வாரியம் அவசியமாகிறது.முஸ்லிம்களுக்கு வக்பு வாரியம் இருப்பதைப் போல், ஹிந்துக்களுக்கு சனாதன வாரியம் வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது. வக்பு வாரியம் 1913-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்டது, பின்னர் 1923-ம் ஆண்டு முசல்மான் வக்ப் சட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் 1954 மற்றும் 1995-ம் ஆண்டுகளிலும் சட்டம் திருத்தப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியம் இயங்கி வருகிறது. இது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற வாதத்தை ஒரு தரப்பினர் முன் வைக்கின்றனர். முஸ்லிம்களின் சொத்துகளை காப்பதற்காகவும், பிரிவினையை உருவாக்குவதற்காகவும் வக்பு வாரியத்தை ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அது இன்றைக்கும் நடைமுறையில் இருப்பதால் பலர் கேள்வி கேட்கின்றனர், அதற்கு பதில் சொல்லவேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.சனாதன வாரியத்தின் மூலம் இந்துக்களின் கோயில்களை அரசின் பிடியிலிருந்து விடுவித்து ஹிந்துக்களே நிர்வகித்தால் அது ஹிந்துக்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும். சனாதன வாரியம் என்று ஒன்று இருந்தால் தான் வக்பு வாரியம் பற்றிய கேள்வி எழாது என மத்திய அரசு நினைக்கலாம். அப்படி மத்திய அரசு நினைத்தால் சனாதன வாரியம் உருவாவது உறுதியாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Sampath Kumar
ஜன 04, 2025 09:34

கேடு கேட்ட ஆர்யா கும்பலுக்கு சனாதன வாரியம் அவசியம் தேவை அப்போ தான் இன்னும் மக்களை குறிப்பாக ஹிந்து மக்களை முட்டாள்களாக வைத்து இருக்க உதவும்


Mettai* Tamil
ஜன 08, 2025 11:06

அப்போ வக்பு வாரியமும் மக்களை முட்டாள்களாக வைத்து இருக்கதான் 1913 ல் ஆரம்பிக்கப்பட்டதா? சனாதன தர்மம் காக்க சனாதன வாரியம் அவசியம் தேவை..தேவை ......


INDIAN
ஜன 02, 2025 15:30

மத அடிப்படையில் ஆனா எந்த நாடும் உருப்பட்டதில்லை, பாக்கிஸ்தான் , அபிகானிஸ்தான் போன்ற நாடுகள் நிலைகுலைந்து போனதற்கு அதுவே காரணம் . சவூதி , ஓமான் போற்ற முஸ்லீம் நாடுகள் கூட மத தலையீட்டை ஓரம்கட்டி இன்றய பொருளாதார யுகத்துக்கு தகுந்தாற்போல் தங்கள் நாடுகளை தயார் செய்து கொண்டிருக்கிறது , அப்படி உலகம் மாறிக்கொண்டிருக்கையில் இவர்கள் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச்செல்ல இந்த மாதிரி கோரிக்கைகள் உதவுமே தவிர நாட்டை முன்னேற்ற எந்த வகையிலும் இது போன்ற செயல்கள் பயன்படாது , அதை அறிந்து ஆன்மீகத்தை அரசியலில் கலப்பது , அல்லது அரசியலை ஆன்மீகத்தில் கலப்பது நாட்டை சீரழித்துவிடம் , இன்றய ஆட்சியாளர்களுக்கே ஓட்டுக்காக ஆன்மீகவாதிகளின் தலையீட்டை அனுமதிப்பது அவர்களுக்கே எதிராக முடியும் , நாட்டை அழிவுப்பாதைக்கு எடுத்து செல்லும் . துபாய் , சவூதி அரேபிய , ஓமான் போன்ற நாடுகள் அங்குள்ள மதத்தலைவர்களை ஓரங்கட்டி உட்கார வைத்துவிட்டு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார்கள். இந்தியா பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறது


ghee
ஜன 02, 2025 07:59

உன் கதை எல்லாம் யார் கேட்டா


Sivagiri
ஜன 02, 2025 05:39

அப்போ , வக்ப் வாரியத்தை கலைத்து விட்டு ஒவ்வொரு மசூதியையும் தற்போது யார் கவனிக்கிறாங்களோ அவங்க கையிலேயே கொடுத்து விட்டு , கவர்ன்மெண்ட் ஒதுங்கிக்கனும் , முஸ்லீம் மசூதிகளில் கவர்ன்மெண்டுக்கு என்ன வேலை ? . . . அந்தந்த மசூதி , அதில் உள்ள உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தவர்களாலே அவர்களே நிர்வகித்துக் கொள்ளுமாறு விடுவித்து , விசா வேண்டியதுதான் , தீர்வு . . . ஆனால் அவர்கள் கண்டிப்பாக இந்திய பிரஜையாக இருக்கோனும் , இல்லேன்னா பாகிஸ்தான் பங்களாதேஸ்காரன் இங்கே வந்து உறுப்பினராகி , நாட்டாமே பண்ண ஆரம்பிச்சிடுவான் , இப்போ கிறிஸ்டின் சர்ச்சுகளில் , போப் மாதிரி


T.sthivinayagam
ஜன 02, 2025 01:33

பண்டிகையை கொண்டாட ஹிந்துக்களுக்கு மாதம் தோரும் ஆன்மீக உதவிதொகை தரவேண்டும்


பார்த்தி
ஜன 01, 2025 22:19

அடேய் துர்க்க துர்வேஷா.. இந்து கோவில் வருமானத்துல எல்லாரும் கும்மி அடிப்பிங்க வந்தேறி மதங்களான மற்ற மத வரு மானம் அவங்களுக்கு மட்டும்.. இதற்காக தான் சனதான வாரியம்... இந்து கோவில் சொத்து மற்றும் வருவாய்களை இந்துக்களுக்காக மட்டும் தான்னு இருக்க இந்த சனாதன வாரியம் தேவை


பார்த்தி
ஜன 01, 2025 22:13

ஐயோ நானு தேங்கா மடையனே னு சொன்னேன்..


Kasimani Baskaran
ஜன 01, 2025 21:47

கேடுகெட்ட திராவிடனுக்கு கூட கட்சியெல்லாம் இருக்கும் பொழுது பெரும்பான்மை இந்துக்களுக்கு என்று ஒரு வாரியம் இருக்கக்கூடாதா?


Dhurvesh
ஜன 01, 2025 20:13

பெரியவரே ரங் அதற்காக வீட்டு கிரகப்பிரவேசம் முடிந்தவுன் ஒருத்தரை சூரை தேங்காய் சுற்ற சொல்லுவார்கள் , அவர் வந்து உனக்கு ஆர்டர் போடுவாரா , இந்த பெட் ரூம் படுக்காதே இந்த ரூம் க்கு நீ வரக்கூடாது என்று என்ன பெரிசு பதில் சொல்லு


ghee
ஜன 02, 2025 07:57

பாவம்... அவருடைய சொந்த கதை போல..சொல்றாரு


Dhurvesh
ஜன 01, 2025 19:51

வக்பு வாரியம் உள்ளது , ஏன் எனில் மசூதி எல்லாம் மொகலாயர்கள் கட்டியது , அனால் ஹிந்து கோயில் எல்லாம் சனாதன தண்டங்கள் கட்டவில்லையே தமிழன் தானே கட்டினான் , அப்புறம் எப்படி அவனை பார்த்து சனாதன வாரியம் , சுயமா யோசிங்க?


Ganapathy
ஜன 01, 2025 20:06

இப்படி கேனத்தனமா யாரும் யோசிக்கலை அன்னிக்கு. ஏன்னா அன்னிக்கு திராவிடங்களும் இல்லை.


Svs Yaadum oore
ஜன 01, 2025 20:07

கோவிலை தமிழன் கட்டினானாம்... அப்ப அந்த கோவிலில் சிலைகள் ஆபாசம் என்று சொன்ன திராவிடனுக்கு கோவிலில் என்ன வேலை??... தமிழனுங்கதான் கோவில் சிலைகளை ஆபாசமாக செதுக்கினார்களா ??....


srinivasan
ஜன 01, 2025 21:57

தமிழன் தான் போய் உ பி , லயும் மஹாராஷ்ட்ராலயும் கோயில் கட்டினானா .? 200 ரூபாய் உயிநீ திமுக வுக்கு சொம்பு அடி . ஆனால் சனாதனத தை எதிர்த்தால் கொசுவைப் போல் நசுக்கடிக், கப்படுவாய்


சமீபத்திய செய்தி