வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கதிசக்தி போட்டுத்தள்ளுது.. நாமதான் வல்லரசு. 2047 ல பாருங்க.
மும்பை: மஹாராஷ்டிராவில் லாரி மீது டெம்போ மோதி விபத்து ஏற்பட்டதில், 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், 16 பேரை ஏற்றிச் சென்ற டெம்போ, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால், இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரி மீது மோதியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புபடையினர் தீவிரமாக மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாசிக்கில் உள்ள சிட்கோ பகுதிக்கு சென்று கொண்டிருந்த டெம்போவில் 16 பயணிகள் இருந்தனர். அவர்கள் ஒரு மத நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ, லாரி மீது மோதியதால் விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிவித்தார்.
கதிசக்தி போட்டுத்தள்ளுது.. நாமதான் வல்லரசு. 2047 ல பாருங்க.