உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,வில் ஹிந்தி எதிர்ப்பு பேரணி; பறந்தது 20 ஆண்டு பகை; ஒரே மேடையில் ராஜ், உத்தவ் தாக்கரே!

மஹா.,வில் ஹிந்தி எதிர்ப்பு பேரணி; பறந்தது 20 ஆண்டு பகை; ஒரே மேடையில் ராஜ், உத்தவ் தாக்கரே!

மும்பை: 20 ஆண்டுகள் பகையை மறந்து,மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு பேரணியில் உத்தவ், ராஜ் தாக்கரே இருவரும் பங்கேற்றனர். ஒரே மேடையில் இருவரும் அமர்ந்து இருந்தனர்.மஹாராஷ்டிரா அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து மும்மொழி கொள்கைக்கு எதிராக இன்று (ஜூலை 05) ஹிந்தி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ig3z0gt4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் படி மஹாராஷ்டிரா பா.ஜ., மகாயுதி அரசு 1 ம் வகுப்பு முதல் பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாம் மொழியாக மாற்றியது இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மாநில அரசு பின் வாங்கியது. எனினும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள எண்ணிய உத்தவ், ராஜ் தாக்கரே இருவரும் இன்று (ஜூலை 05) பேரணி நடத்தினர்.மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் இருவரும் பங்கேற்றனர். இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய முதல் பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவால் செய்ய முடியாத ஒன்றை, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செய்து விட்டார். என்னையும், சகோதரர் உத்தவ் தாக்கரேவையும் இணைத்து விட்டார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஹிந்தி திணிப்பை ஒரு போதும் ஏற்க மாட்டோம். 3ம் மொழிக்கு இங்கு என்ன தேவை உள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களை விட, ஹிந்தி பேசாத மாநிலங்கள் அதிக வளர்ச்சி கண்டுள்ளன.

ஹிந்தி திணிப்பு

மஹாராஷ்டிராவில் மராத்திக்கு மட்டுமே முக்கியத்துவம். பா.ஜ., ஹிந்தியை திணிக்கிறது. ஹிந்தி என்பது வெறும் 200 ஆண்டு கால வரலாறு கொண்ட மொழி மட்டுமே ஆகும். மஹாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்க சதி நடக்கிறது. இந்தியாவின் பாதி பகுதிகளை மஹாராஷ்டிரா பேரரசர்கள் ஆட்சி செய்த போதும் மராத்தியை திணிக்கவில்லை. ஹிந்தியை எதிர்க்கவில்லை. ஆனால் மாநிலங்கள் மீது திணிப்பது ஏன்? இவ்வாறு ராஜ் தாக்கரே பேசினார்.

முக்கியமானது

பேரணியில் உத்தவ் தாக்கரே பேசியதாவது: ராஜ்தாக்கரேயும், நானும் ஒன்றுப்பட்டுள்ளோம். ஒன்றாக ஆட்சிக்கு வருவோம். நாங்கள் இந்த நிகழ்ச்சியை அறிவித்ததிலிருந்து, இன்று எங்கள் உரைக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். மேலும் இந்த மேடை எங்கள் உரைகளை விட முக்கியமானது. ராஜ் தாக்கரே ஏற்கனவே மிகச் சிறந்த உரையை நிகழ்த்தியுள்ளார். இப்போது நான் பேச வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
ஜூலை 06, 2025 13:33

அவர்கள் ஒற்றுமை இவர்களுக்கு ஏன் பீதியை கிளப்புகிறது ?


Venkat
ஜூலை 05, 2025 20:52

மராட்டியத்தின் அடிப்படை வரி வடிவ எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் இருந்து அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டதால் ஹிந்தி வேண்டாம் என்று மராத்தி படித்தாலும் அடிப்படை எழுத்துக்கள் தாமாகவே படிக்கப் படும்.வேறுபடும் வார்த்தைகள் ,மொழி இலக்கணம்,இலக்கியம் படிக்க மட்டுமே மெனக்கெட வேண்டும்.தென்னக மொழிகள் அதிலிருந்து முற்றுமே வேறு பட்டது.என்ன செய்ய ? திமுக மொழி அரசியல் இங்கும் பின்பற்றப் படுகிறது. எதோ ஒரு உணர்வு இந்தியர்களை இணைத்திருந்தது....இனிவரும் காலங்களில் அது காணாமற் போகும்.


தமிழ்வேள்
ஜூலை 05, 2025 18:58

பாரதத்தின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பை கலைத்து ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று மொழிகள் இருக்கும் படி மறுசீரமைப்பு செய்ய இதுதான் சரியான நேரம்... இல்லையெனில் திமுக கும்பல் மாதிரி தேச துரோகிகள் வேர் விடுவதை தவிர்ப்பது கடினம்....மொழிப் பிரிவினை பேசுவோர் முதுகெலும்பு முறிக்க பட வேண்டியது பாரத தேச நலனுக்கு அவசியம்.


V RAMASWAMY
ஜூலை 05, 2025 18:30

தேவையில்லாத அவசியமில்லாத ஹிந்துக்களைக் குறி வைக்கும் தி மு கவைப் பின்பற்றும் அரசியலுக்காக உள்ள பேரணி.வேறொரு ஆங்கில செய்தித்தாளில் ஒரு வாசகர் சொன்னது போல் மராட்டி மொழி பேசவில்லை என்று இவர்கள் தாக்குவது ஹிந்துக்களை மட்டுமே. இதனால் நன்மையை விட தீமையே அதிகம்.


நசி
ஜூலை 05, 2025 17:14

என்ன பிரயோசனம் 60‌வயது தாண்டிய கிளவர்கள..குலம் இனம் குடும்ப பெருமையை கேட்க‌ எந்த இளைஞனும் தயாராக இல்லை..மோடியை எல்லாரும் நம்புகிறார்கள் ஏன்‌ என்றால் நாட்டுக்காக 24 மணி நேரமும் உழைக்கிறார் அந்த யுக புருஷனை இன்னும15‌வருடங்களுக்கு யாரும் அசைக்கமுடியாது.....தாக்கரேக்கள் அல்சேஷன் வாக்கிங் போவது நல்லது


Iyer
ஜூலை 05, 2025 14:52

மராத்திய மொழிக்கும் ஹிந்திக்கும் - எழுத்துக்கள் 100% சமம். மராத்திய மொழிக்கும் ஹிந்திக்கும் - பேசும் வார்த்தைகள் 80% சமம் மும்பையில் இப்போது மரத்தியர்களும் ஹிந்தியில் தான் பேசுறகிறார்கள் திடீரென்று இந்த 2 திருடர்களுக்கும் மராத்திய மோகம் ஏன் வந்தது? முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் BENDI BAAZAR, MUMBRA , MOHAMMED STREET - போன்ற பகுதிகளில் இந்த கோழைகள் கட்டாயமாக மராத்தி பேசவைக்கமுடியுமா? இந்த 2 திருடர்களை உடனே NSA சட்டத்தில் தூக்கு உள்ளி தள்ளுங்கள்.


Iyer
ஜூலை 05, 2025 14:45

 ஏழை - தெரு வியாபாரிகள், வாகன ஓட்டுனர்களை - மராத்தி தெரியாத காரணத்தால் அடிக்கும் இந்த ராஜ் - உத்தவ் குண்டர்கள் - மராத்தி தெரியாத அமிதாப் பச்சனையோ, சல்மான் கானையோ, தொடமுடியுமா?  இந்த இருவரும் ஊழலில் ஊறிய மகா திருடர்கள்.  இந்த ரவுடித்தனங்கள் - மராத்தி மொழி மீது உள்ள பாசத்தால் அல்ல.  இந்த ரவுடித்தனங்கள் ஏழை வியாபாரிகளை மிரட்டி தினமும் மாமூல் வசூலிக்கத்தான்.  ரெண்டு போரையும் தூக்கி NSA சட்டத்தில் 1 வருடம் அடைத்து வைத்தால் வழிக்கு வருவார்கள்  மகாராஷ்டிரா அரசியலில் இவர்கள் இருவரும் சூன்யங்கள். SINGLE DIGIT கட்சிகள்


Oviya Vijay
ஜூலை 05, 2025 14:34

இந்த பேரணியில் அவர்கள் குறிப்பிடுவது... ஹிந்தி பேசும் மாநிலங்களை விட ஹிந்தி பேசாத மாநிலங்கள் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளன... இதை ஒவ்வொரு மாநிலமாக தற்போது உணர்ந்து வருகின்றனர்... ஆனால் இந்த உண்மை மத்திய அரசின் மரமண்டைக்குத் தான் எப்போது உரைக்குமோ...


Shankar
ஜூலை 05, 2025 15:18

மாநில வளர்ச்சிக்கும் மொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உங்களுடைய மரமண்டைக்கு எப்பொழுது உரைக்குமோ


Balasubramanyan
ஜூலை 05, 2025 14:31

Our VCK chief pl note. You have your party okie at Maharashtra. Do you know Marathi language. But you can manage with Urdu. does Raj Thackeray and Uddhav knows only Marathi and not Hindi.So will they raise against Bollywood stars and Hindi films. The politicians in Tamil Nadu ridiculing Vedas and reciting in Sanskrit. They say that they cannot understand anything. But they understand reciting Kiran in Arabic and Urdu. Shameless politicians everywhere. They do not talk. Write and read their mother tongue without grammatical mistakes.


Oviya Vijay
ஜூலை 05, 2025 14:31

மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை நடைமுறைப் படுத்தாமல் எவ்வாறு தமிழ்நாடு உறுதியுடன் இருந்து வருகிறதோ அதேபோல் தற்போது மற்ற மாநிலங்களும் குறிப்பாக பாஜக ஆதரவில் ஆட்சி நடத்தும் மாநிலங்கள் கூட நம்மையே பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்... இது தொடக்கம் மட்டுமே... மாநிலங்களின் எதிர்ப்பு தொடருமானால் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை தேசிய அளவில் பாஜக வாபஸ் பெறக்கூடும்... அதே போல் பாஜக தமிழ்நாட்டில் மட்டும் நுழையவே முடியவில்லை என்பதைக் கூட மற்ற மாநில மக்கள் ஆச்சர்யத்துடன் உணரும் தருணத்தில் அந்தந்த மாநிலங்களிலும் பாஜகவை ஒதுக்கி வைக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தூக்கியும் எறிந்து விடுவர்... அந்த நாள் வெகு தொலைவிலில்லை...


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 05, 2025 16:01

முதலில் உன்னைப் போன்ற மதம்மாறிகளை வாடிகனுக்கு துரத்தியடிக்க வேண்டும் அப்போதுதான் இந்தியா வல்லரசாகும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை