உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 60 ஆண்டுகளில் இல்லாத நிலை; மஹா.,வில் எதிர்க்கட்சி தலைவர் யாருமில்லை!

60 ஆண்டுகளில் இல்லாத நிலை; மஹா.,வில் எதிர்க்கட்சி தலைவர் யாருமில்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. இது 60 ஆண்டுகளில் நடக்காத ஒன்று ஆகும்.மஹாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்று, பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில், தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=82q1j871&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், மஹாயுதி கூட்டணி 234 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில், பா.ஜ., மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. சிவசேனா 57, மற்றும் தேசியவாத காங்., 41 இடங்களில் வென்றன. மஹா விகாஸ் அகாடி கூட்டணியில், உத்தவ் தாக்கரே கட்சி 20, காங்., 16, சரத் பவார் கட்சி 10 இடங்களில் வென்றுள்ளன. இந்தக் கூட்டணி ஒட்டுமொத்தமாக, 50 இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி அந்தஸ்து யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. இது 60 ஆண்டுகளில் நடக்காத ஒன்று ஆகும். கடந்த 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்கவில்லை.இது குறித்து, சட்டசபையின் முன்னாள் முதன்மை செயலாளர் கூறியதாவது: பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற, மொத்தமுள்ள சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 10% இடங்களை பெற்று இருக்க வேண்டும். அதன்படி 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 28 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரை பரிந்துரைக்க முடியும். தேர்தல் முடிவுகளின் படி, மிகப்பெரிய எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 21 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது, அது பதவிக்கு உரிமை கோர முடியாது.காங்கிரஸ், 16 உறுப்பினர்களையும், சரத் பவார் தலைமையிலான என்சிபி, 10 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இதனால் இவர்கள் யாருக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை. விதிகளின்படி, தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்திருந்தாலும், மூன்று கட்சிகளின் கூட்டு பலத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற முடியாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

jayvee
நவ 24, 2024 18:31

ஒரு வேலை அதிமுக விஜய் மற்றும் திருமாவளவன் கூட்டணி அமைத்தால் இந்த நிலை தமிழகத்திலும் வரலாம்


வல்லவன்
நவ 24, 2024 13:35

EVM வெற்றி நீண்ட காலம் நிலைக்காது


வாய்மையே வெல்லும்
நவ 24, 2024 16:17

அப்போ திராவிடிய மாடல் அரசு ஜெயிச்ச யுக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லை இனிமே இருநூறு ரூபாய் வழங்கப்படாத நிலையில் வெறுப்பு பிரச்சாரம் செய்து பிழைக்கிறாய்


jayvee
நவ 24, 2024 18:30

சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிடலாம் .. EVM சரியில்லை


பேசும் தமிழன்
நவ 25, 2024 08:45

ஆமாம் வயநாடு மற்றும் சட்டிஸ்கர் போன்ற இடங்களின் வெற்றி.... EVM மூலம்... நீண்ட காலம் நிலைக்காது.


JANA VEL
நவ 25, 2024 11:07

உங்க வீட்டில் டியூப் லைட் உபயோகமா இல்லே இன்னும் அந்த தீவட்டி இல்லே பெட்ரோமாஸ் மாதிரி ஏதும் உபயோகம் பண்றீங்களா. மாத்துங்க


Dharmavaan
நவ 24, 2024 13:00

அப்போது பார்லிமென்டில் ராகுல்கான் எப்படி எதிர்க்கட்சி தலைவன் ஆனான்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 24, 2024 12:49

வாக்காளர்களுக்கு மட்டும் விழிப்புணர்வு இருந்திருந்தால் அதிகபட்சம் எமர்ஜென்ஸிக்குப் பிறகாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்காது ......


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 24, 2024 12:49

ஒட்டுண்ணி கேவலமா இல்லை இதை சொல்ல அஜித் பவார் , பவார் கட்சியில் இருந்து , ஷிண்டே தாக்கரே கட்சியில் இருந்து அவர்களிடம் ஒட்டுன்னி ஆகி நீர் பேசுகிறேன் . இதுவரை 477 MLA க்கள் 45 MP க்கள் கட்சி மாறி அதாவது வாங்கி ஆட்சி மாற்றம் , இன்று உம கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் ED IT CBI க்கு பயந்து தான் உம் கட்சயில் ஐக்கியம் இல்லை என்றால் உம்ம கதி நாறி இருக்கும்


K. Suriyanarayanan
நவ 24, 2024 14:42

ஜார்கண்டில் வெற்றி பெற்றால் இனிக்கும் , மகா ராஷ்ட்ர தோற்றால் கசக்கும் என்ன இது தான் த்ராவிடயன் மாடல் . புது கோட்டை தமிழன் 3 முறை தேர்வு வாழ்த்து சொல்ல துப்பில்லை


SIVA
நவ 24, 2024 11:34

கூடா நட்பு கேடாய் முடியும் என்பது கட்டுமர தீர்ப்பு , சிவசேனா தீவிர இந்துத்துவா கட்சி , சரத் பவார் பதவிக்காக யாருடன் வேண்டும் என்றாலும் கூட்டு சேருவார், உட்கட்சி மோதல் பிரச்சனைகள் சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் .... மஹாவிகாஸ் கூட்டணிக்கு இந்த தேர்தல் முடிவால் ஒரு திருப்தி இருக்கும் என்ன என்றால் மூன்று கட்சிக்கும் பெரும் தோல்வி , இவர்களுக்கு இது மட்டுமே சந்தோசம் , உத்தவ் தாக்கரேவுக்கு இபோதும் வாய்ப்பு உள்ளது பெரோஸ் கான் காந்தியை விட்டு விலகி வந்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் , அஜித் பவார் சரத் பவார் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அதனால் சரத் பாவருக்கு இப்போது வரை எந்த இழப்பும் இல்லை , கண்கள் பனித்தன இதயங்கள் இணைந்தன என்று அஜித் பாவருடன் எப்போது வேண்டும் என்றாலும் இணைத்து கொள்வார் ....


raja
நவ 24, 2024 11:23

ஏன்... தமிழகத்தில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து வென்ற பொழுது எதிர்கட்சிகள் படு தோல்வி அடைந்தன...அப்போது கூட்டணி கட்சியான தேமுதிக தான் எதிர்கட்சி விஜயகாந்த் தான் எதிர்கட்சி தலைவராக இருந்தார்...அது போல ஷிண்டே எதிர்கட்சி தலைவர் ஆகலாம்...


Anantharaman Srinivasan
நவ 24, 2024 14:17

ஜெ.. தயவில் எதிர்கட்சியான பின் அதோடு விஜயகாந் கதை முடிந்தது...


Durai
நவ 24, 2024 11:09

நமது முதல்வர் ஜார்கண்ட் முடிவுகளைப்பற்றிக் கருத்து தெரிவித்தார். ஆனால், மகாராஷ்டிரா பற்றி ஒன்றும் சொல்லவே இல்லை?


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 24, 2024 11:41

பிஜேபி தான் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லணும் , அவர் திட்டத்தை COPY அடிச்சி மகளிருக்கு 1500 மாதம் என்கிற திட்டம் தான் அவர்களுக்கு கை கொடுத்து உள்ளது


Anantharaman Srinivasan
நவ 24, 2024 11:04

மஹா.,வில் எதிர்க்கட்சி தலைவர் யாருமில்லை தான் நினைத்ததை தடங்கலில்லாமல் செய்ய இதே நிலையை பார்லிமென்ட் டில் பிஜேபி எதிர்பார்க்கிறது.


Anantharaman Srinivasan
நவ 24, 2024 11:00

எதிர்கட்சி யே வேண்டாம். உள்ளிருந்தே கொல்லும் வியாதிபோல் ஷிண்டே வே போதும்.


Vazhga Bharatham
நவ 24, 2024 13:06

பாவம். புலம்புர நிலை


புதிய வீடியோ