உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரைவில் மகாராஷ்டிரா தேர்தல்; தயாராகுது தேர்தல் கமிஷன்!

விரைவில் மகாராஷ்டிரா தேர்தல்; தயாராகுது தேர்தல் கமிஷன்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தீபாவளி, சாத் பூஜை ஆகிய திருவிழாக்களை மனதில் வைத்து, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்யுமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை அளித்துள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், இரண்டு நாட்களாக மும்பையில், அரசியல்கள் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நாங்கள், காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் அணி) ஆம் ஆத்மி உள்ளிட்ட 11 அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். அதன் அடிப்படையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.தீபாவளி, சாத் பூஜா ஆகிய திருவிழாவிற்கு முன்னரே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட கோரிக்கை விடுத்தனர். மொத்த வாக்காளர்கள் 9.59 கோடி பேர், இதில் 4.59 கோடி ஆண்களும், 4.64 கோடி பெண்களும் ஓட்டுப்போட தகுதியானவர்கள். 18 வயது பூர்த்தியான, முதன் முதல் வாக்காளர்களாக 19.48 லட்சம் பேர்கள் உள்ளனர்.மொத்தம் உள்ள சட்டமன்ற தொகுதிகள் 288, எஸ்.சி. 29 தொகுதிகள், எஸ்.டி. 25 தொகுதிகள் அடங்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.மகாராஷ்டிராவில், மஹா விகாஷ் அகாடி கூட்டணிக்கும், மஹா யுதி கூட்டணிக்கும் முக்கிய போட்டி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Karthi
செப் 29, 2024 07:46

டம்ளக் cong


பாமரன்
செப் 28, 2024 23:46

எதுக்கும் மேலிடம் தேர்தல் டூர் ரிகர்சல் ப்ரோக்ராம் எப்ப முடியுதுன்னு கேட்டுட்டு அறிவிப்பீங்களாம்...


Sundar R
செப் 28, 2024 21:09

வேட்பாளரை தேர்தல் ஆணையம் கடுமையான நேர்காணல் வைத்து தெரிவு செய்ய வேண்டும். வேட்பாளராக நிற்கும் ஒருவர் தேசவிரோதம், பிரிவினைவாதம், நிரூபிக்கப்பட்ட குற்றவாளியாக ஜாமீனில் இருப்பவர், மொழி பேதம், ஜாதி எதிர்ப்புக் கொள்கை, மத எதிர்ப்புக் கொள்கை, இல்லாத ஒன்றை இருப்பதாக புருடா விடுபவர், ஒரு இடத்தில் ஒன்று பேசி, அடுத்த நிமிடமே வேறு இடத்தில் வேறு ஒன்று பேசுபவர், பொய் வாக்குறுதி கொடுப்பவர் ஆகிய குணாதிசயங்களைக் கொண்டவரானால் அவர் வேட்பாளராக போட்டியிட யோக்கியதையற்றவராகிறார். இதுபோன்ற ஆசாமிகளை முளையிலேயே கிள்ளி எறிந்து வேட்பாளராக போட்டியிட அனுமதி மறுக்கப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்தால் வாரிசு, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், அவர்களின் பினாமிகள் ஆகியோரையும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தடை விதிக்கலாம்.


Sundar R
செப் 28, 2024 19:51

தேர்தலுக்கு முன்பும் பின்பும் நிலைமை சீராக இருக்க ஏகப்பட்ட சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. கண்டவன் எல்லாம் வேட்பாளராக போட்டியிட தடை விதிக்க வேண்டும்.


தேர்தல் பிரியன்
செப் 28, 2024 18:50

ஒரே நாடு.. ஒரே தேர்தலின் கீழ் அடுத்த பொதுத் தேர்தலோட மகா. தேர்தலையும் வெச்சுக்கலாமே. இல்லே பார்லிமெண்ட்டையும், மூத்த மாநில ஆட்சிகளையும் கலைச்சுட்டு ஒரே தேர்தலா வெச்சுரலாம். கோவிந்த் ம் சந்தோஷப் படுவாரு. மூவாயிர பக்க அறிக்கை குடுத்திருக்காரே. மக்களுக்கும் ஆயிரமோ, ரெண்டாயிரமோ கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை