வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கதி சக்தி ஹைன். மெடல் குத்திக்கோங்க ஹைன்.
மும்பை: மஹாராஷ்டிராவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், ஷேகான்-காம்கான் நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் பயணிகள் பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிறிது நேரத்தில், பின்னால் இருந்து வந்த தனியார் பயணிகள் பஸ் ஏற்கனவே சேதமடைந்த வாகனங்கள் மீது மோதியது.மூன்று வாகனங்கள் மோதிய பயங்கர விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விபத்தில் சிக்கிய 3 வாகனங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கதி சக்தி ஹைன். மெடல் குத்திக்கோங்க ஹைன்.