உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா புது அரசு இன்று பதவியேற்பு

மஹாராஷ்டிரா புது அரசு இன்று பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி அரசு இன்று ( நவ.,25) மீண்டும் பதவியேற்க வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 235 இடங்களில் இக்கூட்டணி கைப்பற்றியது. தனிப்பெருங்கட்சியாக பா.ஜ., உள்ளது. இதனையடுத்து அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.,வின் பட்னாவிஸ், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே கடுமையான போட்டி உள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என இன்னும் முடிவாகவில்லை எனக்கூறப்படுகிறது. புதிய முதல்வர் குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் என பட்னாவிஸ் கூறியுள்ளார்.இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளரும், மூத்த அமைச்சருமான தீபக் கேசர்கார் , மஹாராஷ்டிரா மாநில அரசு பதவியேற்பு விழா இன்று பதவியேற்க உள்ளதாக கூறியுள்ளார்.அதேநேரத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மட்டுமே இன்று பதவியேற்பார்கள் எனக்கூறப்படுகிறது. அமைச்சரவையில் இடம்பெறப்போவது யார் என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mohan
நவ 25, 2024 10:57

எங்கள் தலைவன் பாட்னவிஸ் தான் முதல்வர் ஆக வேண்டும் 132 சீட் வாங்கிட்டு.. அது மட்டும் இல்லாம ஷிண்டே கு நிர்வாக திறமை இல்லாதவர் ...பாட்னவிஸ் அருமையான பெரும்போக்கான, அமைதியான அவருடைய பாதுகாப்பு காவலர்கள் கூட அவர்மீது பெரும் கண்ணியம் மதிப்பும் வைத்துள்ளனர் அவ்வளவு எளிய தலைகனம் இல்லாத மனிதர் ...இங்கு அவருக்கு அதிக செல்வாக்குண்டு .. பிரதமர் பதவிக்கு கூட தகுதியானவர், அவரோட ஆட்சியில் தான் மகாராஷ்டிரா நல்ல முன்னேற்றம் கொண்டது அதை கண்கூடாக பார்த்தவனென்கிற முறையில் சொல்கிறேன் .. ஷிண்டே இங்கே மகளிருக்கு 2100 குடுக்கறேன்னு சொல்லிக்கூட பிஜேபி குத்தான் அதிக வாக்களித்துள்ளார்கள் ஆகவே அவர் தான் அடுத்த முதல்வர் அடுத்து பிரதமர் ..


Haja Kuthubdeen
நவ 25, 2024 10:24

தனிப்பெறும் கட்சி என்ற முறையில் பிஜேபிக்குத்தான் முதல்வர் பதவி என்பது நியாயம் என்றாலும் சென்ற தடவைபோல ஷிண்டேவே முதல்வராக வாய்ப்பு அதிகம்.


Indian
நவ 25, 2024 09:09

துரோகத்துக்கு , இந்த பதவி ஏற்பில் துரோகமே பதிலாக கிடைக்கும் ..


RAMA
நவ 25, 2024 05:45

235 . இரண்டோடு மூன்றைக் கூட்டினால் ஐந்து. நல்ல எண் தான்.


Indian
நவ 24, 2024 22:12

நாற்காலியிலேயே வித்தியாசம் தெரிகிறது ...பாப்போம்


Mohammad ali
நவ 24, 2024 21:44

இது போலி திருட்டு திராவிடியா மாடல் அரசல்ல .


Anantharaman Srinivasan
நவ 24, 2024 22:29

திராவிடியா என்ற வார்த்தையை சொன்னதற்காகத்தான் போன வாரம் மூன்று நாள் கஸ்தூரி உள்ளேயிருந்தார்.


Ramesh Sargam
நவ 24, 2024 20:25

யார் முதல்வர்? யார் துணை முதல்வர்? யார் யாருக்கு என்ன துறை? இனிதான் உண்மையான போர்.


முக்கிய வீடியோ